Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஆன்மீகம்13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்

13 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகத்துக்குத் தயாராகும் வடபழநி ஆண்டவர் கோயில்

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் நாளை தொடங்குகின்றன.

இதற்கு முன்பு கும்பாபிஷேகம் 2007-ம் ஆண்டு நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் பணிகளுக்குத் தயாராகியுள்ளது, வடபழநி ஆண்டவர் திருக்கோயில். இதையொட்டி, கும்பாபிஷேகப் பணிகளுக்கான கோயில் பாலாலய விழா மார்ச் 11, 12 ஆகிய இரண்டு நாள்களுக்கு நடைபெறுகிறது.

முதல்நாள் நிகழ்ச்சியாக, மார்ச் 11 புதன்கிழமையன்று காலை 9 மணி முதல் 11.30 மணிவரை அனுக்ஞை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகிய பூஜைகள் நடைபெறும். மாலை 6 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் முதல்கால யாகபூஜைகள் தொடங்கி நடைபெறும். பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்படும். இரவு 9.30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும்.

மறுநாள் மார்ச் 12-ம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜைகள் நடைபெறும். அடுத்து காலை 8 மணிக்கு மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெறும். அதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பாலாலய பிரதிஷ்டை காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து காலை 9.15 மணிக்குத் திருப்பணிகள் தொடங்கப்பெறும். பாலாலய விழாவைக் காண்பதற்குத் திரளான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகளை காவல்துறையும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதுகுறித்து அறநிலையத் துறையின் மக்கள் தொடர்பு அலுவலர் த.மருதபிள்ளை பேசியது:

சென்னையின் புகழ்வாய்ந்த இந்தத் திருக்கோயிலில் நடைபெறுகிற பாலாலய விழாவை பக்தர்கள் வந்து சிறப்பித்து, வடபழநி ஆண்டவர் அருள்பெற்றுச் செல்ல வேண்டும். திருப்பணிகள் மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments