Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedதமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா - சென்னையில் 618 பேர் பாதிப்பு -...

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா – சென்னையில் 618 பேர் பாதிப்பு – தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 20,246.

தமிழகத்தில் இன்று 874 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 618 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 12,762 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 13,380 ஆக அதிகரித்துள்ளது.

874 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 70.70 சதவீதத் தொற்று சென்னையில் (618) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 20,246 -ல் சென்னையில் மட்டும் 13,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 66.06 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 154 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .76% என்கிற அளவில் உள்ளது. 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.87 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 141 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் சராசரி 278-க்கு மேல் வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களிலிருந்து தொற்று எண்ணிகையுடன் வந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 1394 பேர் .

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 154 பேரில் சென்னையில் மட்டுமே 114 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 74 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 13,380-ல் 114 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் .85 என்கிற எண்ணிக்கையில் உள்ளது.

இதனால் சென்னையின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் நம்ம சென்னை கொரோனா தடுப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 36 வார்டுகளைக் குறிவைத்து ஆய்வுகள் நடத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 59,546 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 20,246 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 16,281 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத் கொரோனா தொற்று எண்ணிக்கை 15,562 ஆக உள்ளது.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments