Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஉலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உலகின் மிக நீளமான அடல் சுரங்க நெடுஞ்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

உலகின் மிக நீளமான அடல் சுரங்கபாதையை இமாச்சல பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இந்த சுரங்கப்பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.

9.02 கிலோ மீட்டர் நீளம். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரம், என உலகின் அதி நீள சுரங்க பாதையாக உருவாகி இருக்கிறது அடல் சுரங்க பாதை. மணாலியையும் லாஹாவ் – ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் இந்த சுரங்கபாதை உருவாக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கபாதையால் இனி ஆண்டு தோறும் போக்குவரத்து தடையில்லாமல் நடைபெறும் என்கின்றனர் அதிகாரிகள்.

மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும். அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனையப் பகுதி, 3,060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனைய பகுதி 3,071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.

குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5 புள்ளி 525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது.

தினமும் 3,000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாக, காற்றோட்ட வசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாக இந்த சுரங்கப்பாதை வடிவமைப்பட்டுள்ளது.

போதிய வெளிச்ச வசதியுடன், கண்காணிப்பு முறைகளை கொண்டதாக இந்த சுரங்கப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments