Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,395 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,25,391 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,846 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,572 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,69,664 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு – விவரம்

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 6,25,391 பேரில் 3,77,541 பேர் ஆண்கள், 2,47,819 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 77,82,736 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 82,725 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

சென்னையில் 1,367 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,74,143 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments