Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி

ஹனோய்

வியட்நாம் நாட்டில்கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 என அதிகரித்துள்ளது. அக்டோபர் மாத ஆரம்ப நாட்களில் கனமழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலச்சரிவு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வியட்நாம் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பாண் வான் ஜியாங்க், நாங்கள் இன்னுமொரு உறக்கமற்ற இரவை எதிர்கொண்டோம் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், குண்டு வீச்சு போல மழை எங்கள் மீது விழுந்தது என தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு 2 மணியில் இருந்தே அப்பகுதியில் 5 முறை நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும், அங்கிருந்த மலையே வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். துவா தியென் ஹ்யூ மாகாணத்தில், மீட்புப் படையினர் குறைந்தது 15 கட்டுமானத் தொழிலாளர்களைக் காணவில்லை. வார தொடக்கத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பின்னர் இறந்துவிட்டதாக அஞ்சுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments