Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்அமெரிக்க அதிபர் தேர்தல் - டிரம்பின் இந்திய காற்று மாசு கருத்து

அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்பின் இந்திய காற்று மாசு கருத்து

இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று “அசுத்தமாக” உள்ளது என தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது.

90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் நடுவரான க்ரிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு கையாளுவீர்கள் அதே சமயத்தில் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிரம்ப், “கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் எண்ணிக்கை சரியானதாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு அசுத்தமாக உள்ளது. இந்தியாவை பாருங்கள், அதன் காற்று அசுத்தமாக உள்ளது. பாரிஸ் ஒப்பந்தத்தால் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை, நிறுவனங்களையும் நான் இழக்க விரும்பவில்லை. இது மிகவும் நியாயமற்றது.” என தெரிவித்தார்.

“நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை மீட்க வேண்டியிருந்ததால், நான் பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினேன். நாம் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டோம்” என்று ஜோ பைடனுக்கு எதிரான விவாதத்தின்போது டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.

இந்த கருத்துகள் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இது உள்நோக்கம் உள்ளதாக சிலர் கருதுகின்றனர். இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி பலரும் பிரதமர் மோதியிடம் வலியுறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் உலகத்திலேயே மிகவும் மோசமான காற்று உள்ள நகரம் டெல்லி என்பதையும் ஒப்புக்கொள்கின்றனர்.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை டிரம்ப் பேசியதை அடுத்து, ட்விட்டரில் “filthy” மற்றும் “Howdy! Modi” போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாக தொடங்கின. டிரம்பின் கருத்துகள் குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கபில் சிபல், இருநாட்டு தலைவர்களுக்கு இடையே உள்ள தோழைமை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வருகை தந்தார் டிரம்ப். அப்போது இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடத்திய மோதி, டிரம்புக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றதை பலரும் குறிப்பிட்டனர். டிரம்ப் கூறியது சீனாவை பொறுத்தவரை முற்றிலும் உண்மையில்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் இது உண்மையாக இருக்கலாம் என்று பலரும் கருத்து கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments