Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர் நியமனம் - மாநகராட்சி ஆணையர்

சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர் நியமனம் – மாநகராட்சி ஆணையர்

வருகின்ற சட்ட மன்ற தேர்தலுக்காக சென்னையில் உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 9 பறக்கும் படையினர் என்ற விகிதத்தில் தற்போது 144 பறக்கும் படையினர் பணி அமர்த்த பட்டு உள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் சென்னை மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தெரிவித்துள்ளார் .

சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தேர்தல் பறக்கும் படை குழுவினருடன் ஆய்வு கூட்டம் நடத்திய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

தேர்தல் முன்னேற்பாடுகள் நடவடிக்கை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

சென்னையில் ஏற்கனவே 48 பறக்கும் படைகள் உள்ள நிலையில் தற்போது 144 பறக்கும் படைகள் உள்ளது எனவும் 94 பறக்கும் படைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தங்கம் வெள்ளி போதை பொருள்கள் உள்ளிட்ட பல பொருட்களும் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் நடத்தை விதியை மீறியவர்கள் மீது 17 புகார்கள் பெறப்பட்டு 14 புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்களுக்கு தகுந்த ஆவணங்கள் இருந்தால் 48 மணி நேரத்திற்குள் திரும்ப அவர்களிடம் ஒப்படைக்கப்படும்

16 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணி இன்று தொடங்குகிறது
MCMC என்று அழைக்கப்படும் விளம்பரங்கள் மீடியக்காளில் ஒளிபரப்பும் போது அது கட்டணம் செலுத்துவதாக இருந்தால் அதனை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அது வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்.

தேர்தல் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும், மீடியாக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் மெசேஜ் அல்லது வாய்ஸ் மெசேஜ் ஐ மொத்தமாக வெளியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற வேண்டும்

தேர்தல் நேரத்தில் சுவரொட்டிகள் அகற்றுவது விளம்பர பலகைகள் அகற்றுவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் சென்னை மாநகராட்சி செயல்பட்டுக்கொண்டு உள்ளது.

ஒரு தொகுதிக்கு ஒரு நாளைக்கு 9 பறக்கும் படையினர் வீதம் 144 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்

காவல்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் இந்த குழுவில் இருப்பார்கள்.
கொரனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்

சென்னையில் மட்டும் 3 லட்சம் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

முதியோர் தபால் வாக்குகள் போடுவது அவர்கள் விருப்பம். வாக்குச்சாவடிகளை பொறுத்தவரையில் இந்திய தேர்தல் ஆணையம் தெளிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மாஸ்க் அணியாவிட்டால் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதியில்லை. மாஸ்க் இல்லாமல் வருபவர்களுக்கு மாஸ்க் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும்

ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இரண்டு தன்னார்வலர்கள் இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments