Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

புறநகர் ரயில்கள் குறித்த சென்னை ரயில்வே கோட்டம் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரம் கீழ்வருமாறு:

வார நாட்கள் (திங்கள் – சனி):

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 150 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம்: 64 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 68 சேவைகள்.

4) சென்னை கடற்கரை – தாம்பரம்/ செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம்: 152 சேவைகள்.

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில்:

1) சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மார்க்கம்: 32 சேவைகள்.

2) சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டை மார்க்கம்: 24 சேவைகள்.

3) சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கம்: 12 சேவைகள்

4) சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கம்: 18 சேவைகள்.

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

குறிப்பு: இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை *நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது* .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments