Monday, June 21, 2021
Home தமிழகம் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்? - அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்? – அமைச்சர் விளக்கம்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த சிறப்பு பேட்டியில், பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் கூறியதாவது;

பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த 2 மாதங்களாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. தமிழக அரசை பொறுத்தவரை எந்த நேரத்திலும் தேர்வை நடத்துவதற்கு தயார் நிலையில் இருந்தது.

கடந்த 1ந் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், சி.பி.எஸ்.சி.க்கான பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். மேலும் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்களை மதிப்பீடு செய்வது குறித்து முடிவு செய்ய சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு அவர்களின் உடல்நலமும் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அரசு இருந்து வருகிறது. இதன் காரணமாகவே ஆரம்பத்திலேயே எந்த முடிவும் எடுக்காமல், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் மாணவர்களின் உடல்நலத்தை காக்கும் வகையில் அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்ற கருத்தையே அனைவரும் பிரதானமாக முன்வைத்தனர்.

அதே நேரம் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வதன் மூலம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை கொண்டு வந்தால் அதை நாம் எதிர்த்தாக வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பலர் தெரிவித்தனர்.

இவ்வாறு பல்வேறு தரப்பினரிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாணவர்களின் நலன் கருதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments