Monday, June 21, 2021
Home இந்தியா டெல்லியில் மெட்ரோ ரயில்கள் ஓட தொடங்கின - ஷிப்ட் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி

டெல்லியில் மெட்ரோ ரயில்கள் ஓட தொடங்கின – ஷிப்ட் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி

டெல்லியில் தொற்று குறைந்ததால் அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, கடைகள், மார்க்கெட்டுகள், அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் இன்று முதல் தொடங்கியது.நாடு முழுவதும் இந்த 2-வது அலை பெருத்த பாதிப்பை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.. அதனால்தான், மாநிலங்களில் லாக்டவுன் போடப்பட்டு தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஊரடங்கு போட்டபிறகுதான் அதற்கு ஓரளவு பலன் கிடைத்தது. அதன் காரணமாக, இப்போது தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளது. இதன்காரணமாக, ஏராளமான மாநிலங்களில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவால் பெற்றோரை இழந்த.. குழந்தைகளின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கும்.. அரவிந்த் கெஜ்ரிவால்கட்டுப்பாடுகள்அந்த வகையில் டெல்லியிலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தப் போவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.. அதன்படி, டெல்லி சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றப்படை- இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், மெட்ரோ ரெயில்களும் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.முதல்வர்ஆனால், 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று முதல் சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றைப்படை – இரட்டைப் படை எண்கள் அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில்களும் 50 சதவீத பயணிகளுடன் ஓட தொடங்கி உள்ளன.சேவைகிட்டத்தட்ட 3 வார இடைவெளிக்குப் பிறகு டெல்லி மெட்ரோ ரெயில் இன்று தன்னுடைய சேவைகளைத் தொடங்கியது. அளவுக்கு அதிகமான தொற்று பரவியதால், கடந்த மே 20 முதல் டெல்லி மெட்ரோ ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி முதல் ரயில்கள் ஓட தொடங்கி உள்ளன. பயணிகள் மாற்று திசைகளில் அதாவது எதிரெதிரே மட்டுமே உட்கார்ந்து பயணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதால், அந்த விதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மெட்ரோ அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியின் பொருளாதாரம் தேவையை கணக்கில் கொண்டு, இந்த அறிவிப்பை வெளியிடுவதாக ஏற்கனவே கெஜ்ரிவால் தெரிவித்திருந்த நிலையில், இதன்மூலம் வருவாய் பெருக்கம் ஓரளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட் கார்டு, மற்றும் ரயில் நிலையிங்களில் வாங்கும் டோக்கன் என இரண்டு வகை பயணிகளும் இதில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் சேவை போலவே, கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, ஷிப்ட் அடிப்படையில் ஒருநாள் விட்டு ஒருநாள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேபோல 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments