Sunday, June 20, 2021
Home பொது மருத்துவமனையில் மாயமான பெண் நோயாளி மர்ம மரணம்

மருத்துவமனையில் மாயமான பெண் நோயாளி மர்ம மரணம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் மாயமான நிலையில், மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து அழுகிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மௌலி. ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி சுனிதாவிற்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூச்சுத் திணறல் இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை 3வது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மனைவிக்கு உணவு கொடுத்துவிட்டு வீட்டிற்குச் சென்றவர் மீண்டும் மறுநாள் 23 ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்து மனைவி சுனிதா மாயமானதால் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் சுனிதாவை மருத்துவமனை முழுவதும் ஊழியர்கள் தேடியும் அவர் கிடைக்காததால் மௌலி கடந்த மாதம் 31 ஆம் தேதி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துமனை காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வாய்மொழிப் புகார் அளித்துவிட்டு சுனிதாவின் புகைப்படத்தை கொண்டு வருவதற்காக வீட்டிற்குச் சென்றுள்ளார்.

பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாலும், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காரணத்தாலும் மௌலியால் உடனே மீண்டும் வர முடியாத சூழ்நிலை உருவானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து துர்நாற்றம் வந்ததால் அங்குச் சென்ற பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதைக் கண்டறிந்து அதை பிணவறைக்கு கொண்டு சென்று வைத்துவிட்டு மனைவி காணாமல் போனதாக புகாரளித்த மௌலிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த மௌலியிடம் பிணவறையில் இருந்த பெண்ணின் உடலைக் காட்டியபோது அது தான் நீண்ட நாட்களாக தேடி வந்த தனது மனைவி சுனிதாதான் என அவர் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து மௌலியிடம் புகாரைப் பெற்று சந்தேக மரணம் என பதிவு செய்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments