Sunday, June 20, 2021
Home இந்தியா கொல்கத்தா - பஞ்சாபைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை

கொல்கத்தா – பஞ்சாபைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் இருவர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை

கொல்கத்தாவில் போலீசாருக்கும் பஞ்சாபைச் சேர்ந்த ரவுடிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல ரவுடி ஜெய்பால் புல்லார் உள்பட 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அவர்களிடமிருந்த 70 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், துப்பாக்கிகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை என்கவுண்ட்டர் நிகழ்ந்த இடத்தில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

2 காவல்துறை அதிகாரிகளை சுட்டுக் கொன்ற வழக்கில் தேடப்பட்ட இரண்டு ரவுடிகள் கொல்கத்தாவில் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பஞ்சாப் போலீசார் கொல்கத்தா போலீசாருடன் இணைந்து பிரபல ரவுடியான ஜெய்பால் புல்லாரையும் அவன் கூட்டாளி ஜஸ்பிரித்சிங்கையும் சுற்றி வளைத்த போது துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

அதிமுக தோல்வி குறித்து ஆபரேஷன் தியேட்டர் கட்டி ஆய்வு செய்ய வேண்டும் – திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – முதல் இன்னிங்ஸில் இந்தியா 217 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸை இழந்த இந்தியாவை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன். அதன்படி முதல் இன்னிங்ஸை நேற்று தொடங்கியது இந்தியா. ரோகித் ஷர்மா மற்றும்...

நீட் தேர்வு – பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. மாணவர் நலனுக்கும்,...

பப்ஜி மதனுக்கு ஜூலை 3 வரை நீதிமன்ற காவல்

ஆபாச யூடியூபர் மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து சென்னை சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தருமபுரியில் மதனை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து...

Recent Comments