Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

இரானில் விழுந்து நொறுங்கிய உக்ரைன் விமானம் - ஒருவர்கூட பிழைக்கவில்லை Featured

இராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது கடந்த வாரம் இரான் ராணுவ அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, நேற்று சுலைமானியின் உடல், நல்லடக்கம் செய்யப்பட்டது. இது நடந்த அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் இராக்கில் உள்ள அமெரிக்க விமானத் தளம் மீது இரான் தொடர் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சில அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இரான் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இரு நாடுகளுக்கு இடையே தொடர் தாக்குதல் நடந்துவரும் இதே சூழலில் அங்கு திடீர் விமான விபத்தும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 170 பயணிகளுடன் இன்று காலை 6:12 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 8:12) உக்ரைன் தலைநகர் கிய்வ் (Kyiv) நோக்கிப் புறப்பட்டது போயிங் 737-800 ரக உக்ரைன் ஏர்லைன்ஸ் விமானம்.
 
இது விமானநிலையத்திலிருந்து 60 கி.மீ தொலைவில் பரந்த் மற்றும் ஷஹ்ரியர் ஆகிய பகுதிகளுக்கு இடையில் தரையில் விழுந்து நொறுங்கி அதே இடத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. விமானம் விழுவதற்கு முன்னதாக வானத்திலேயே தீப்பற்றி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான உக்ரைன் விமானம் இன்று காலை 5:15 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டும் ஆனால், ஒரு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே விபத்து நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
விமான விபத்து நடந்த வீடியோ காட்சியை இரான் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் விமானம் கீழே விழுந்து நொறுங்கும் அனைத்துக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போயிங், ``உக்ரைன் விமான விபத்து குறித்து நாங்கள் அறிவோம். மேலும், சில தகவல்கள் மற்றும் உயிர்ச் சேதம், விபத்துக்கான காரணம் போன்றவை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.
 
நேற்று இராக்கில் உள்ள அமெரிக்கப் படை மீது இரான் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணிநேரங்களில் இந்த விமான விபத்து நடந்துள்ளதால் தாக்குதலுக்கும் விபத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்காவுடனான சண்டை, விபத்து போன்றவற்றால் இரானில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது.
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
The Ultimate addon for elementor page builder and Metform The most flexible form-builder for Elementor.… https://t.co/WJkGy5pqS6
Follow Themewinter on Twitter

Post Gallery

தமிழ், கன்னட மொழிகளில் நடித்த பிரபல நடிகை வீட்டில் வருமான வரி சோதனை

சிம்புவை வைத்து அரசியல் 'மகா மாநாடு' நடத்தும் வெங்கட் பிரபு

காஷ்மீர் பிரச்சனை - தோல்வியில் முடிந்த சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி

ஆஸ்திரேலியாவில் திடீர் மழை - காட்டுத்தீயின் தாக்கம் குறைகிறது

அதிபர் விளாடிமிர் புதின் பதவியில் நீடிக்க நடவடிக்கை - மெத்வடேவ் விலகல்

அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை - விசாரணைக்கு தயாராகும் செனட் சபை

புதுச்சேரி பா.ஜ.கவுக்கு மீண்டும் தலைவரானார் சாமிநாதன்

தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் பாதிப்பு இல்லை - துரைமுருகன்

நிர்பயா வழக்கு - குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு தள்ளுபடி