Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

வருமான வரித்துறை சம்மனுக்கு விளக்கம் அளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் - நடிகர் விஜய் கோரிக்கை Featured

சென்னை

நடிகர் விஜய் இன்றே ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.வருமான வரித்துறை சோதனையை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கும் வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் பிகில் பட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரத்துக்கும் ஐ.டி சம்மன் அனுப்பியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு முதலில் 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களில் வருமான வரித்துறை அலுவலகத்தில் தோன்றி விளக்கம் அளிக்கலாம். சம்மனுக்கு மூன்று நாட்களில் பதில் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரத்தில் இந்த காலக்கெடு மாற்றப்பட்டது.

இந்த சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. உடனே பதில் அளிக்க வேண்டும். இன்றே விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்காக சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வர வேண்டும் என்று அவசர அவசரமாக சம்மன் அனுப்பி உள்ளது. வருமான வரித்துறை இப்படி திடீர் என்று முடிவை ஏன் மாற்றியது என்று விளக்கம் அளிக்கப்படவில்லை.

அதேபோல் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அங்கிருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஏன் அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் விஜய் கூடுதல் அவகாசம் கேட்டு இருக்கிறார். உடனடியாக விசாரணைக்கு வர முடியாது. கூடுதல் அவகாசம் தேவை. குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அவகாசம் தேவை என்று விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் இதற்கு வருமான வரித்துறை சார்பாக அளிக்கப்பட்ட பதில் குறித்த தகவல் வெளியாகவில்லை. பெரும்பாலும் விஜய்க்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். கூடுதலாக நாளை வரை அவகாசம் தர மட்டுமே வாய்ப்புள்ளது என்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறார். நெய்வேலியில் இதன் ஷூட்டிங் தீவிரமாக நடந்து வருகிறது.

 
 
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

ஐ.ஆர்.சி.டி.சி.யின் ‘மகாகாள் எக்ஸ்பிரஸ்'

டெல்லியை சர்வதேச தரத்திலான நகராக உயர்த்த பாடுபடப் போவதாக உறுதி - கெஜ்ரிவால்

எத்தனை அழுத்தங்கள் வந்தாலும் குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை - பிரதமர் மோடி

ஓ.என்.ஜி.சி லாபம் 50 சதவீதம் சரிவு

கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவம் - சீனா

நானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷங்கர்

ஈராக் - அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

விவசாயக் கடன் கண்காணிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்