Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பெரம்பலூரில் அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்திற்கு சீல் - அதிகாரிகள் நடவடிக்கை Featured

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே அண்ணாமலை காந்தி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கீழ்தளம், தரைதளம் மற்றும் 3 அடுக்கு வணிகவளாகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த புதிய வணிகவளாக கட்டுமானமானது வணிக கட்டிடம் நகர ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் பெறவேண்டிய தொழில்நுட்ப முன்அனுமதி பெறாமல் நடைபெற்று வந்தது.

இதுகுறித்து ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர், முறையான அனுமதி பெற்று கட்டுமான பணிகளை தொடருமாறும், இல்லாவிட்டால் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்டிட உரிமையாளருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதியும், கடந்த மாதம் 23-ந் தேதியும் என இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதனை பொருட்படுத்தாமல் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தொடர்ந்ததால், நகர், ஊரமைப்புத்துறை உதவி இயக்குனர் ஸ்ரீதர் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை புதிதாக கட்டப்பட்டுவரும் வணிகவளாகத்திற்கு சென்றனர். அங்கு பணிநிறுத்துவதற்கான உத்தரவை அமல்படுத்தும் வகையில் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 57(4)-ன் கீழ் பூட்டி முத்திரையிடப்படுவதாக தெரிவிக்கும் தகவல் பிரசுரத்தை ஒட்டி கட்டிடத்திற்கு ‘சீல்' வைத்தனர்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

கொரோனாவுக்கு எதிராக 3000 ஆண்டு பழமையான மருத்துவம் - சீனா

நானும் ரெடி விஜய்யும் ரெடி - இயக்குனர் ஷங்கர்

ஈராக் - அமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்

விவசாயக் கடன் கண்காணிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

செயில் நிறுவனம் - ரூ.343 கோடி இழப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு - தமிழகம் முழுவதும் போராட்டம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் தொடர் ரத்து

இந்திய பங்குச்சந்தைகள் சரிவு