Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

“வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம்” என்று பேசிய அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு Featured

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி ராமதாஸ்,    "எதிரணியில் உள்ள திமுகவினரிடம் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு தானே வர வேண்டும். வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்" என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Rate this item
(0 votes)
Last modified on Thursday, 23 May 2019 06:33

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.