Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் - முன்னாள் நீதிபதிகள், துணை வேந்தர்கள் கோரிக்கை Featured

சென்னை

பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பா.ஜ.கவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம்.

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார் 2019 தேர்தல்தான் இறுதி தேர்தலாக இருக்கும் என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அதற்கு பிறகு ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம்தான் இருக்கும். ஒரு தலைவனின் காலில் மண்டியிடுகிற எதேசதிகார போக்கு நிலவும்.

ஜனநாயக நாட்டினுடைய நிறுவனங்களெல்லாம் இன்று நாசப்பட்டுள்ளன. அவற்றினுடைய சுய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. எந்த நிறுவனமும் இன்றைக்கு நம்பிக்கைதன்மை போன்றதாக இல்லை. அதனால் ஜனநாயகத்தினுடைய அடிப்படைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த 5 ஆண்டுகள் இதே ஆட்சி மீண்டும் வந்துவிட்டது என்றால் அதன் விளைவு மிக கொடூர விளைவாக இருக்கும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அடகு வைக்கப்பட்டுவிட்டன. இதை கல்வித் துறையில் நாங்கள் மிக அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். இந்திய வரலாற்று நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு செல்ல பா.ஜ.க முயற்சி செய்கிறது.

மக்களுடைய பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை, வழிபாட்டு உரிமை, திருமண உரிமை என அனைத்தும் இன்று மறுக்கப்படுகின்றன. ஆகையால் இந்தியா என்றாலே பன்முகத்தன்மை என்ற ஒரு கலாசாரத்தை அழித்து ஒழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே நிறம் என இந்துத்துவ கலாசாரத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது.

இந்த ஒரு சனாதன கலாசாரத்தை மீண்டும் இந்த நாட்டில் நிலவ பா.ஜ.க சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் முன்னால் இருக்கும் அபாயம் என்ன என்பதை புரிந்து கொண்டு இந்த நாடு ஜனநாயக நாடாக, சுதந்திர நாடாக, எதேசதிகாரத்தை தூக்கி எறிந்த நாடாக, அரசியல் சாசன விழுமியங்களை ஏற்றுக் கொண்ட நாடாக இருக்க போகிறதா என்பதை உணர்ந்து உங்கள் வாக்குகளை போட வேண்டும் என்றனர்.

 


Rate this item
(0 votes)
Last modified on %PM, %23 %314 %2019 %12:%May
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The Ultimate addon for elementor page builder and Metform The most flexible form-builder for Elementor.… https://t.co/WJkGy5pqS6
Digiqole - News Magazine WordPress Theme Dark Variation Added #wordpress #themeforest #newstheme… https://t.co/n2QZuo82gT
@envato_help I apologize, I need quick action about the ticket no. #1702520. Please, help me. Regards.
Follow Themewinter on Twitter

Post Gallery

நித்தியானந்தா வந்தால் இந்தியாவுக்கு தெரிவிக்குமாறு எல்லா நாடுகளுக்கும் சுற்றறிக்கை

பெண்களின் பாதுகாப்புக்காக விரைவில் சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம் - காவல் ஆணையர் விஸ்வநாதன்

தெலங்கானா என்கவுன்டர்  - போலீஸாருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்த ஹரியானா தொழிலதிபர்

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 58 பேர் பலி

சூடானில் தீ விபத்தில் இறந்த 6 இந்தியர்கள் உடலை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை

சசி தரூருக்கு பரூக் அப்துல்லா கடிதம்

சர்வதேச ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு நடுவராகப் பணியாற்றவுள்ள பெண் நடுவர்

லண்டனில் ”தாடி இருந்தால் வேலை இல்லை” என கூறிய ஹோட்டல் - 6 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பு

தமிழக உள்ளாட்சி தேர்தல் வழக்கு "இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு" - மு.க.ஸ்டாலின்