Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் Featured

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(19). இவர் 2019 - 2020ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறி அதற்கான மதிப்பெண் பட்டியலுடன் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் இவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அதாவது கல்லூரியில் படிப்பவர் ஒருவர், தேர்வு எழுதியவர் வேறொருவர் என புகார் எழுந்தது.

இதையடுத்து நீட் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்தையும் படிப்பில் சேர்ந்துள்ள மாணவரின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்த தேனி அரசு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மாணவர் உதித் சூர்யா மீது போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து அவரது தந்தை, தாயிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இந்த நிலையில் ஆள்மாறாட்டம் செய்தது உறுதியானதை அடுத்து உதித் சூர்யா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து அவரை பிடிக்க போலீஸார் 10 தனிப்படையினரை அமைத்துள்ளனர். அவருடைய உறவினர்கள் வீடு, அவருடைய தந்தையின் நண்பர்கள் வீடுகளில் போலீஸார் சோதனை செய்தனர்.

இந்த ஆள்மாறாட்ட சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக இந்த ஆள்மாறாட்ட புகாரை அசோக் கிருஷ்ணன் என்பவர்தான் தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஈமெயில் மூலம் புகார் அளித்தது தெரியவந்தது. ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதை தனது விடுதி அறையில் இருந்த மாணவர்களிடம் உதித் சூர்யா கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து போலீஸாரும் மருத்துவத் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். . ஆள்மாறாட்டம் செய்ய பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் உதவி செய்தனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதப்பட்ட விவகாரத்தில் பல லட்சம் ரூபாய் கைமாறியிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது நீட் நுழைவுச் சீட்டில் உள்ள புகைப்படத்துக்கும் நேரில் வந்துள்ளவருக்கு வித்தியாசத்தை அங்கிருந்த அதிகாரிகள் கண்டுபிடிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் அதிகாரிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் தந்தை வெங்கடேசனையும் உதித் சூர்யாவையும் கண்டுபிடித்தால் மட்டுமே பல்வேறு உண்மைகள் வெளிவரும் என தெரிகிறது.

 
 
Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
Follow Themewinter on Twitter

Post Gallery

ஸ்டாலின் தொடர்ந்து முதலமைச்சர் கனவில் இருக்கிறார் - முதலமைச்சர் பழனிசாமி

புதுடெல்லியில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுங்க, அமைதியை உறுதி செய்யுங்க - கெஜ்ரிவால் அமித்ஷாவுக்கு வேண்டுகோ

ஈரானை தொடர்ந்து ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைனை அதிரவைக்கும் கொரோனா

டிரம்ப் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை - முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன

இந்திய இரயில்வேயின் அவலம்.

பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை

உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு - தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன்

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் - ஜப்பான் அரசு கவலை