Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி Featured

மும்பை
 
அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ் கேப்பிடல்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. இந்நிறுவனம், 'ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தில், 42.88 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதே அளவிலான பங்குகள், ஜப்பானைச் சேர்ந்த, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் உள்ளன. எஞ்சிய பங்குகளை, இதர முதலீட்டாளர்கள் வைத்துள்ளனர்.
 
இந்நிலையில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், அதன் வசமுள்ள, 42.88 சதவீத பங்குகளை, நிப்பான் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வழங்கி, மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தில் இருந்து வெளியேறுகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஒரு பங்கின் விலை, 230 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த, 60 நாட்களில், இந்நிறுவனப் பங்கின், குறைந்தபட்ச விலையை விட, 15 சதவீதம் அதிகம். 
 
இந்த பங்கு விற்பனை மூலம் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு, 6,000 கோடி ரூபாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.'இத்தொகை, மொத்த கடனில், 33 சதவீதத்தைக் குறைக்க உதவும்' என, ரிலையன்ஸ் கேப்பிடல் தெரிவித்துள்ளது.இது குறித்து, அனில் அம்பானி கூறுகையில், ''இந்த பங்கு விற்பனையுடன், மேலும் சில நடவடிக்கைகள் மூலம், நடப்பு நிதியாண்டில், ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின், 50 சதவீதத்திற்கும் அதிகமான கடனைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதன் காரணமாக, தொலை தொடர்பு சேவையை கைவிட்ட இக்குழுமம், மியூச்சுவல் பண்டு துறையில் இருந்தும் வெளியேறியுள்ளது.
Rate this item
(0 votes)
Last modified on Saturday, 25 May 2019 14:14

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

Conference Event WordPress Theme -> 2 New Home Added #wordpress #event #conference #wordpresstheme #themeforest… https://t.co/RnzM5q7gY7
SEO Agency WordPress theme updated with 2 New Homes. #wordpress #seo #agency #digitalmarketing #seoagency… https://t.co/9C9PiW7HDq
Insurance Agency WP Theme updated with One Click Demo Installation. #WordPress #agency #insurance #theme… https://t.co/xw6bItqaS5
Follow Themewinter on Twitter

Post Gallery

பங்ளாதே‌ஷில் கால்வாய்க்குள் கவிழ்ந்த ரயில்

சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் அடுத்த ஆண்டுக்குள் நிலத்தடி நீர் என்பதே இருக்காது - நிதி ஆயோக்

சீன எல்லையில் மாயமான இந்திய போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்

எட்டு வழிச்சாலை திட்டம் - சென்னை உயர்நீதிமன்ற தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மியூச்சுவல் பண்டு வர்த்தகத்தை கைவிட்டார் அனில் அம்பானி

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் பா.ஜ.கவிற்கு தாவுகிறார்

கட்சியை மறுசீரமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம்  - செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி

தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகன் வெற்றி