Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பஸ் நிலையங்கள்,அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு Featured

நாகர்கோவில்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்ஷால் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகளும், சுகாதார ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் ஆணையர் சரவணகுமார் கூறியதாவது:

பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் மாநகராட்சிக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் கூட்டமாக கூடக்கூடாது. ஒரு நாளுக்கு 15 முறை கை கழுவ வேண்டும். போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மூலம் பொதுமக்கள் கூடினால் கண்காணிக்க வேண்டும்.

வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள 14 பிறப்பு - இறப்பு அலுவலகங்கள், வரிவசூல் மையங்கள், 5 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் போன்றவற்றில் சுத்தம் செய்வதற்கு தேவையான கிருமி நாசினி மருந்துகள் மற்றும் பிளச்சிங் பவுடர் போன்றவை இருப்பில் உள்ளது.

அண்ணா பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையங்கள் போன்றவற்றில் இருந்து தினமும் 908 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே 2 பஸ் நிலையங்களிலும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு ஷிப்டுகளாக ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டு அனைத்து பஸ்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும்.

இன்று முதல் (அதாவது நேற்று) முதல் இந்தப்பணி முழுவீச்சில் நடைபெற வேண்டும். அதேபோல் அனைத்து டெப்போக்களுக்கும் சென்று பஸ் இருக்கைகள், ஜன்னல் கம்பிகள், படியில் ஏறி, இறங்கும் பகுதியில் உள்ள கம்பிகள் போன்றவற்றில் கிருமி நாசினி மருந்து தடவ வேண்டும்.

மாநகராட்சி பகுதியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பஸ் நிறுத்தங்கள் போன்றவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். வடசேரி சந்தை, கோட்டார் சந்தை போன்றவற்றில் மக்கள் அதிகமாக வந்து செல்வதால் அங்கு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் கட்டி வைக்க வேண்டும். மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், கொசு ஒழிப்பு ஊழியர்கள் 1,225 பேருக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Rate this item
(0 votes)
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Latest from Super User

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

The most stylish Isometric Educational theme now comes with #LearnDash demo. #LMS #education #wordpress… https://t.co/C3QIRV1r9b
RT @Javedakhtarjadu: So many killed , so many injured , so many house burned , so many shops looted so many people turned destitutes but p…
100+ sales and New Classical Home added on Turitor Education WordPress theme. #LearnDash and #TutorLms demo will be… https://t.co/i7KzaqZrbW
Follow Themewinter on Twitter

Post Gallery

டெல்லி தப்லிக் ஜமாத் அலுவலகத்தை மூட போலீஸ் உத்தரவு

ப்ரீபெய்டு ப்ளான் வேலிடிட்டி காலத்தை நீட்டிக்க டெலிகாம் நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவு

கேரளாவில் கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி - பினராயி விஜயன்

பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

இருமல், காய்ச்சல் தவிர,  வெளிவந்தகொரோனா வைரஸின் 2 புதிய அறிகுறிகள் - ஜெர்மன் விஞ்ஞானிகள்

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்கள்