Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

80 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி - குழந்தை சுஜித் உயிரிழப்பு Featured

திருச்சி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்து நான்கு நாட்களுக்கு மேலாகி விட்ட நிலையில், மீட்புப்பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வந்தது. குழந்தையின் கை சிதைந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு, மாநில பேரிடர் மீட்பு குழு , மருத்துவக் குழுவினரின் ஆய்வுக்கு பின் சுஜித் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. குழந்தையின் உடலை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து சுஜித்தின் உடலை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இடுக்கி போன்ற கருவி தயார் செய்யப்பட்டது. பேரிடர் மீட்புக்குழுவினர் 88 அடி ஆழத்தில் குழந்தை சுஜித்தின் உடலை மீட்டனர். அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

குழந்தை சுஜித் உயிர் பிழைக்க தமிழகமே பிரார்த்தனை செய்த நிலையில், சுஜித் உயிரிழந்தது தமிழகத்தை, சோக கடலில் மூழ்கச் செய்துள்ளது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர், சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, உறவினர்கள், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை நடந்தது. பின்னர், உடல் அடக்கம் செய்யப்பட்டது.

 
 
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 29 October 2019 05:46
Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

www.themewinter.com

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

@envato_help I apologize, I need quick action about the ticket no. #1702520. Please, help me. Regards.
We have # 1 Event Conference WordPress theme in the #Envato market. Know more : https://t.co/KMtE9Rcg8z https://t.co/HkvJC5P5M4
Do you remember when you joined Twitter? I do! #MyTwitterAnniversary https://t.co/ABeDbww12S
Follow Themewinter on Twitter

Post Gallery

தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டது

மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய சிவசேனா

மகாராஷ்டிராவில் திருப்பம் - சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்

ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் பாக்தாதியை காட்டி கொடுத்தவருக்கு ரூ.177 கோடி பரிசு

80 மணி நேர மீட்பு முயற்சி தோல்வி - குழந்தை சுஜித் உயிரிழப்பு

தீபாவளியன்றும் கனமழைக்கு வாய்ப்பு - 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம் - மு.க.ஸ்டாலின்

லண்டன்  நகரில் 39 பிணங்களுடன் மர்ம லாரி - போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி