Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை - ஆய்வில் கண்டுபிடிப்பு Featured

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பட்டியலிலுள்ள சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடுவதாகவும், போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக போதைப் பொருட்களை வழங்கி, அவர்களை அடிமைப்படுத்தி விடுவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இலவசமாக போதைப் பொருளைப் பெறுகின்ற சிறுவர்களுக்கு, ஒரு கட்டத்தில் இலவச விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், அதனையடுத்து அவர்கள் பணம் கொடுத்து போதைப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், எனவே போதைப் பொருளை வாங்குவதற்கான பணத்துக்காக, சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் அவற்றின் அண்மையில் இருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையும், சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடியாமையாதலும் அதிகமாகக் காணப்படுகின்றது, சிறுவர்கள் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் மலட்டுத் தன்மையை அடைவதாகவும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 18 வயதிற்குக் குறைந்த சிறுவர்களில் சுமார் 6,100 பேர் ஹெரோயினுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரையானோர் ஹெரோயினை தேடி அலைவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1,500 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, தேசிய அளவிலான நடவடிக்ககையை முன்னெடுக்குமாறு, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

 
 
Rate this item
(0 votes)
Last modified on Sunday, 14 July 2019 17:26

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.

Latest Tweets

RT @WCDhaka: You asked and we responded. 2nd Phase tickets on Sale. Get ready. Date: Thursday, 11th July 2019 Time: 4:00pm Per Ticket: 1000…
Deliciko - Restaurant WordPress Theme released on #Themeforest #WordPress #wordpresstheme https://t.co/77NycEKCkB https://t.co/rqMZzumjRJ
Conference Event WordPress Theme -> 2 New Home Added #wordpress #event #conference #wordpresstheme #themeforest… https://t.co/RnzM5q7gY7
Follow Themewinter on Twitter

Post Gallery

சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை - ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரில்லா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது

அதிக இலாபம் ஈட்டிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை

கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம் - சச்சின் டெண்டுல்கர்

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்