Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
தமிழகம்

தமிழகம் (13)

நீலகிரியில் தொடர்ந்து 5 நாட்களாக கனமழை பொழிந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மலைக் கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து அதிகளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு விளை நிலங்கள் நீரில் மூழ்கின. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 15-08-2019 அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகேயுள்ள குருத்துகுளி, கப்பதொரை, மு.பாலாடா, கல்லகொரை ஆடா, வினோபஜ் நகர், இத்தலார்  உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 16-08-2019 அன்று நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி (அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி முகாம்), சேரம்பாடி (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முகாம் ), எருமேடு, மலவஞ்சேரம்பாடி , நடுவட்டம் (அரசு மாணவர் விடுதி முகாம்) உள்ளிட்ட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அரிசி, பருப்பு, பிஸ்கட், ரொட்டி, கொசுவர்த்தி, போர்வை, கொசுவலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

இந்திய தொழிலாளர்கள் விவசாயிகள் பேரவை (எச்.எம்.கே.பி)யின்   அகில இந்திய பொதுச்செயலாளர் சுபாஷ் மால்கி சென்னை வந்தார். தமிழ்நாடு எச்.எம்.கே.பி மாநில அலுவலகத்தை பார்வையிட்டார்.
 
பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர்,  எதிர்கால செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தார். 
 
கோவையில் அங்கீகாரம் இன்றி இயங்கும் போலி எச்.எம்.கே.பி  அலுவலகத்தை முடக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்வாகிகள் மால்கியிடம் வலியுறுத்தினர்.
 
இக்கூட்டத்தில் எச்.எம்.கே.பி யின் அகில இந்திய செயலாளர் என்.ஏ.கோன், மாநில தலைவர் சுருளிவேல், மாநில பொதுச்செயலாளர் வினோத் ராமகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை, சமதா கட்சியின் இளைஞர் அணி மாநில செயலாளர் வர்மா, மகளிர் அணி மாநில செயலாளர் அபி, வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

எல்.ஐ.சி. உழைக்கும் பெண்கள் அமைப்பின் 32-வது மாநாடு கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், பொதுத்துறை, பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் பொதுத்துறையிலேயே பாதுகாத்திட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சட்டமியற்றும் அமைப்புகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும், அனைத்து பெரு நகரங்களிலும் உழைக்கும் மகளிர் தங்கும் விடுதி மற்றும் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அதிகரித்து வரும் பாலின கொடுமைகளைத் தடுத்திட பாலின நிகர்நிலை சமத்துவ கல்வியினை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும், கல்வி நிலையங்களில் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும், சாதி ஆணவக்கொலை என்கிற பெயரில் காதல் திருமணம் செய்தவர்களைப் படுகொலை செய்வதை கண்டித்தும், பெண்களை ஓட்டுநர்களாகக் கொண்டு செயல்படும் பிங்க் டேக்ஸியின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, தேசிய மூத்தோர் தடகள வீராங்கனை டாக்டர் ஜெயா மகேஷ் கௌரவிக்கப்பட்டார்.

எமது நிருபர் பாபு பிரசாத்

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால். இவர் ஜீவஜோதியின் கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாடிப்படிகளில் ஏறமுடியாததால் வேனிலிருந்தே சரணடைந்திருந்தார்.இந்த வழக்கில் ராஜகோபாலனின் உதவியாளரான ஜனார்த்தன் மற்றும் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  ராஜகோபால் உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே மருத்துவவசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற ராஜகோபால் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மையில் அரசின் மெத்தனம் ஆகியவையே உண்மையான காரணம் என்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 30 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக ”சென்னை கேளு என் தண்ணீர் எங்கே கேளு” என்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடகி சின்மயி, சூழலியல் செயல்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பஞ்சம் அதற்கான காரணங்கள் குறித்து பொதுமக்களுடன் உரையாடினர்.

இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றம் சென்று இதற்கான அனுமதியை பெற்று அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக அறப்போர் இயக்கம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சூழலியல் சார்ந்த பணிகளை அரசு முடக்கி வருவதாக அப்போது இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம் சாட்டி வந்தார்

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில், அறப்போர் இயக்க நீர்நிலை குழு ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ் சுல்தான் தலைமையில் பத்து செயல்பாட்டாளர்கள் தரமணி அருகே உள்ள கல்லு குட்டை ஏரியை பார்வையிட்டு அதில் கலக்கும் கழிவுநீர் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் தரமணி லிங்க் சாலையில் உள்ள ஹேமா மஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

தி.மு.க சார்பில் மக்களவைக்கு போட்டியிடும், வில்சன், சண்முகம் மற்றும் வைகோ ஆகியோர் வேட்பு மனுதாக்கல்  செய்தனர். சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில், சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.
 
இதைத் தொடர்ந்து, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்த தடை விதித்தது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரங்களுக்குள் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டது.
 
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நீதிபதி இந்து மல்கோத்ரா தலைமையிலான கோடைக்கால சிறப்பு அமர்வு முன்பு நேற்று (ஜூன்.3) விசாரணைக்கு வந்தது.
 
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க மறுத்துவிட்டனர். மேலும், எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஜூலை முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.ஸ் மகனும், அ.தி.மு.க வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை விட 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று அவர் வெற்றி பெற்றார். தேனி கலெக்டர் அலுவலகத்தில் அவருக்கான வெற்றிச் சான்றிதழை மாவட்ட தேர்தல் அதிகாரி பல்லவி பல்தேவ் வழங்கினார்.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தி.மு.க வசம் சென்ற நிலையில், அ.தி.மு.க சார்பில் ரவீந்திரநாத் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.