Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
உலகம்

உலகம் (53)

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பல நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியது:

நான் 40 ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருக்கிறேன். பல விமர்சனங்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊடகங்களில் வெளியாகும் தவறான கருத்துக்களால் தாக்கப்படுகிறேன். இதனால்தான் செய்தித்தாள்கள் வாசிப்பதையும் தொலைக்காட்சி விவாதங்களைப் பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். என் அதிகாரிகள் அவற்றைப் பார்த்து என்ன பேசப்படுகிறது என்பதை என்னிடம் கூறுவார்கள்.

தற்போது பாகிஸ்தான் மிகக் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டிருக்கிறது. இது குறுகிய காலம்தான். இதைக் கடந்தபின் நல்ல காலம் இருக்கிறது என்று நான் உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.

மேலும், “சாகாமல் சொர்க்கம் செல்ல ஆசைப்பட்ட கதையாகத்தான் இப்போதைய நிலை உள்ளது. இது ஒரு மோசமான எடுத்துக்காட்டாக மாறிவிடும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

உவான்

சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான்  நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவை மிரட்டும் உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு  நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் உவான் நகரில்  இந்த வைரஸ் எப்படி உருவாகியது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உவான் நகரில் உள்ள  கடல் உணவு சந்தை கொரோனா வைரஸ் உருவாக காரணமாக இருந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த சந்தை உள்ளூர் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயல்பட்டன.

மத்திய உவானில் உள்ள ஹுவானன் கடல் உணவு சந்தையில் கோலாக்கள், எலிகள் மற்றும் ஓநாய் குட்டிகள் விற்கப்படுகிறது. எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட முடிவுகளில்  கொரோனா வைரஸ் பரவ  மிகவும் சாத்தியமான வனவிலங்கு, நீர் பாம்பு என்று முதன்முறையாக தெரியவந்துள்ளது  மருத்துவ வைராலஜி ஜர்னலில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. எங்கள் பரிணாம பகுப்பாய்விலிருந்து பெறப்பட்ட புதிய தகவல்கள், கொரோனா வைரசால் தூண்டப்பட்ட நிமோனியாவை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான், தரையில் இருந்து புறப்பட்டு சென்று தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் ஆற்றல் வாய்ந்த காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை கடந்த ஆகஸ்டு 29-ந் தேதி நடத்தியது. நேற்று மீண்டும் காஸ்னவி ஏவுகணையை அந்த நாடு சோதித்து பார்த்தது. இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த ஏவுகணை அணுகுண்டுகளுடன், 290 கி.மீ. தொலைவு வரையில் சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும். இதையொட்டி பாகிஸ்தான் ராணுவ செய்தி நிறுவனம் ஐ.எஸ்.பி.ஆர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த ஏவுகணை சோதனை பகல் மற்றும் இரவு நேரங்களில் செயல்பாட்டு தயார் நிலை நடைமுறைகளை ஒத்திகை பார்ப்பதை நோக்கமாக கொண்டு, படைகளின் கள பயிற்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

இந்த சோதனையை ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். காஸ்னவி அணு ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இருப்பதை அந்த நாட்டின் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான்கான், முப்படை தளபதிகள் பாராட்டி உள்ளனர்.

டமாஸ்கஸ்

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது.  அப்போது, அரசு படைகளுக்கு எதிராக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும் பலம் பெற்று, நாட்டின் பல்வேறு பகுதிகளை பிடித்தது.

ஐ.எஸ் தீவிரவாதிகளை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளும், குர்திஷ் போராளிகளுக்கு  ஆதரவாக அமெரிக்காவும் உள்நாட்டு போரில் களமிறங்கின. இதனால் சிரியாவே சின்னாபின்னமானது. அங்கிருந்து படிப்படியாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு விரட்டி அடிக்கப்பட்டது.

இதில் முக்கிய பங்கு வகித்தது குர்து படைகள்தான். அவர்கள், அமெரிக்காவின் ஆதரவுடன் தீவிரவாதிகளை விரட்டி, ஐஎஸ் பிடியில் இருந்த நகரங்களை மீட்டனர். ஐஎஸ் தீவிரவாதிகள் விரட்டப்பட்டதால், சமீபகாலமாக அங்கு போர் ஓய்ந்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா தனது படைகளை வாபஸ்  பெற்றுக் கொள்வதாக அதிபர் டிரம்ப் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். குர்து படைகளுக்கு தந்த ஆதரவை அவர் விலக்கிக் கொண்டார்.

இதனால், குர்து படைகளுக்கு எதிராக உள்ள அண்டை நாடான துருக்கி தாக்குதல் நடத்த பச்சைக் கொடி காட்டியது போன்றதாகி விட்டது. குர்திஷ் போராளிகள் துருக்கியில் பல்வேறு நாசவேலை செய்து வருவதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே சிரியாவின் இத்லீப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களிடம் இருந்து மாகாணத்தை மீட்க ர‌ஷிய படையின் உதவியுடன் சிரியா ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

இதுஒருபுறம் இருக்க அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் காலூன்றி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கினர்.

இந்த தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். 80 பேர் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 90 பயங்கரவாதிகள் பலத்த காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

வாஷிங்டன்

சீனாவின் யுஹான் நகரில் நிமோனியா போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் மக்களிடம் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதவரை 291 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 54 பேர் இந்த வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் யுஹானில் இருந்து வாஷிங்டன் வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எவரெட் பகுதியில் உள்ள மருத்துவ மையத்தில் அவர் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது என்பதால் அமெரிக்காவில் வேறு யாருக்காவது இந்த வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

லங்காவி,

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது.

மலேசியாவிலிருந்து பாமாயில் இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான இந்தியாவின் நடவடிக்கை, உலகின் இரண்டாவது மிகப்பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளரான மலேசியாவுக்கு பெரும் சவாலை உருவாக்கும். ஏனெனில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியா மலேசியாவின்  சிறந்த சந்தையாக உள்ளது. இதனால் மலேசியா பொருளாதார ரீதியில் பலத்த பாதிப்பை சந்தித்து வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியது: சிறிய நாடான எங்களால் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க இயலாது என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க வழிகளை ஆராய்ந்து வருகிறோம். ஜாகீர் நாயக் மீது இந்திய அரசு ஒரு நியாயமான விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தாலும், நடவடிக்கையின் உண்மையான அச்சுறுத்தலை நாயக் எதிர்கொள்கிறார்.  அவர் பாதுகாப்பாக இருக்க  மூன்றாவது நாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தால் மட்டுமே மலேசியா, ஜாகீர் நாயக்கை இடமாற்றம் செய்யும் என கூறினார்.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை இலக்கு வைத்து ஈரான் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.இதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனாலும் ஈரான் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தலைநகர் பாக்தாத்தில் உயர் பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதியில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இதன் அருகே இன்று 3 ஏவுகணைகள் திடீரென வந்து விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. ஏவுகணை தாக்குதலை அடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்தன. இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற துணை ராணுவ படை குழுக்கள் நடத்தியிருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் பசுமை மண்டல பகுதியில் இதுபோன்ற தாக்குதல்களை இந்த குழுவினர் நடத்தியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 3-வது ஏவுகணை ஒன்றும் வீசப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

எனினும், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மூளும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில், ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஏவுகணை தாக்குதல்கள் நடந்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெய்ஜிங்,

ஒரு புதிய கொரோனா வைரசால் ஏற்படும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோய் பாதிப்பு மத்திய நகரமான வுஹானில் தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200. தெற்கு சீனாவின் ஷென்சானில் சிலருக்கு இந்த பாதிப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

ஷென்சான் நகரிலுள்ள பள்ளியொன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த பீரித்தி மகேஸ்வரி எனும் ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்களன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவரான பிரீத்திக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரசின் பாதிப்பு, தொற்று நோய் மற்றும் கடுமையான சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.  இந்த கொரோனா வைரசின் பாதிப்பால் கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில், சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த 650 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

கொரோனா வைரசின் பாதிப்பால், கொடிய சுவாச நோய் வருவதைத் தடுக்க இந்தியா எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்க வேண்டுமா? என்பது குறித்து மத்திய அரசு உலக சுகாதார அமைப்பை (WHO) அணுகியுள்ளது.

"இந்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கையாக உள்ளது. தேவைப்பட்டால், நாங்கள் அவசரமாக நடவடிக்கை எடுப்போம். இது குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டுமா? என்பது குறித்து உலக சுகாதார அமைபப்புடன் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். அவர்களின் தொழில்நுட்ப ஆலோசனையின் பேரில் நாங்கள் செயல்படுவோம்" என்று சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரி கூறியுள்ளார்.

சார்லட் நகரில் வசித்து வருபவர் லானா சூ கிளேட்டன் என்பவர் இவர் முன்னாள் செவிலியராக பணியாற்றி உள்ளார்.இவர் கோடீஸ்வரரான அவரது கணவர் ஸ்டீவன் கிளேட்டனை கொலை செய்ததாக கடந்த ஆண்டு குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கொலை எவ்வாறு நிகழ்ந்தது என்று பிரேத பரிசோதனையின் அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.
 
அதில் கொலை செய்யப்பட்ட அந்த நபர் கண்ணிற்கு பயன்படுத்திய சொட்டுமருந்து தான் இறப்பு காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் கணவரை கொன்றதாக கைது செய்யப்பட்ட அப்பெண் அளித்த வாக்குமூலம் பரப்ரப்பு ஏற்படுத்தி உள்ளது. அவர் அளித்த வாக்குமூலத்தில்  தன் கணவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் இதனால் அவரைப் பழிவாங்க திரைப்படத்தை பார்த்து கண்ணில் விடும் சொட்டு மருந்தை குடிநீரில் கலந்தேன் என்று தெரிவிந்தார்.
 
மேலும் அப்பெண் கூறுகையில் அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றே நினைத்தே ஆனால் உயிரிழப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று லானா ஒப்புக் கொண்டார். எனினும் கொலை குற்றத்திற்காக அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வளர்ந்து வரும் சமூகத்தில் திரைபடங்கள் நல்ல விஷயங்களை அதிகளவில் கற்றுகொடுக்க தவறுகிறதோ என்று சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு அதன் நட்பு நாடான சீனாவும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இது குறித்த விவாதத்தை பாகிஸ்தானும், சீனாவும் ஐ.நா சபையில் இரண்டு முறை எழுப்பின. ஆனால் காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என தெரிவித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதனை விவாதிக்க மறுத்துவிட்டது. 
 
3வது முறையாக காஷ்மீர் குறித்த விவாதத்தை பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப முயற்சித்தது. அதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்காததால் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
 
பாகிஸ்தானின் இந்த முயற்சி குறித்து பதில் அளித்துள்ள இந்தியா, இது போன்ற செயல்களை விடுத்துவிட்டு, இந்தியாவுடனான நல்லுறவை உருவாக்க தீவிரவாதிகளை பாதுகாக்கும் செயலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Page 1 of 4

Latest Tweets

Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
The Ultimate addon for elementor page builder and Metform The most flexible form-builder for Elementor.… https://t.co/WJkGy5pqS6
Follow Themewinter on Twitter

Post Gallery

செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்திவிட்டேன் - பாகிஸ்தான் பிரதமர்

சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு

பெரியார் படத்திற்கு உதவியதே ரஜினி தான் - ராகவா லாரன்ஸ்

சீனாவில் கொரோனா வைரஸ் - சந்தையில் விற்கப்பட்ட பாம்புகள் மூலம் பரவி உள்ளது

காஞ்சிபுரம் அருகே தந்தை பெரியார் சிலை உடைப்பு

சானியா மிர்சா தனது முதல் சுற்று பெண்கள் இரட்டையர் போட்டியில் இருந்து விலகினார்

ரஜினியின் நெற்றிக்கண் ரீமேக்கில் தனுஷ், கீர்த்தி சுரேஷ்

பாகிஸ்தான் நடத்திய அணு ஏவுகணை சோதனை வெற்றி

சிரியாவில் ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 40 வீரர்கள் மரணம்