Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
உலகம்

உலகம் (87)

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டதன் 40ம் நாள் நினைவு நிகழ்ச்சி, டெஹ்ரானில் நடைபெற்றது.

இதில் பேசிய ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மிரட்டல் விடுத்தார். ஈரான் விவகாரத்தில் சிறிய தவறு செய்தாலும் அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மிரட்டினார்.

சியோல்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுருத்தலாக விளங்கிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பிற்கு 1,370 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் 60 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால், சர்வாதிகார ஆட்சிக்கு பெயர்போன வடகொரியா கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்திற்கு உள்ளான நபரை சுட்டுக்கொன்றுள்ளது.

வடகொரியா நாட்டை சேர்ந்த வர்த்தக அதிகாரி ஒருவர் சமீபத்தில் சீனாவுக்கு சென்று சொந்த நாடு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என வடகொரிய அதிகாரிகளுக்கு சந்தேகம் சந்தேகித்த வடகொரிய அதிகாரிகள் அவரை தனிமைபடுத்தி தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தி இருந்தனர்.

இதற்கிடையில், அந்த நபர் அந்நாட்டின் பொது இடத்தில் உள்ள குளியல் அறைக்கு சென்றுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் பிறருக்கு பரவி விடும் என அதிகாரிகள் பயப்பட்டனர்.

இதையடுத்து அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு உயர் அதிகாரிகளின் உத்தரவின் படி உடனடியாக அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சிங்கப்பூர்

சீனாவுக்குச் சென்றுவந்தவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என, 47 பேருக்கு சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. சீனாவுக்கு வெளியே இந்த வைரசால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூரில் தான். இதையடுத்து சிங்கப்பூர் அரசு முதலில், மஞ்சள் 'அலர்ட்' அறிவித்தது.

சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கும், இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது, தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 'ஆரஞ்சு அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில், சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம், தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு 3711 பேருடன் சென்ற டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் பலருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை சொகுசு கப்பலில் 135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இந்தியர்களும் உள்ளனர். அவர்கள் கப்பலில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உள்பட அனைத்து பயணிகளும் பரிதவிப்பில் இருக்கிறார்கள்.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டைமண்ட் பிரின்ஸ் சொகுசு கப்பலில் உள்ள பயணிகளில் இந்தியர்களும் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கப்பல் ஊழியர்களில் இந்தியர்களும் உள்ளனர் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே சொகுசு கப்பலில் தவிக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், பிரதமர் மோடி தங்களை மீட்டு சொந்த நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவரும் நடிகருமான ஜாக்கிஜான், இந்த கொடூர வைரசை தோற்கடிக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முக்கியம் என்பதை தன்னைப் போன்று பலரும் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனால் தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அளிக்க உள்ளதாக ஜாக்கிசான் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 24, 25 ஆகிய இரு தேதிகளில் டொனால்டு ட்ரம்ப் இந்தியா சென்று நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இரு நாட்டு உறவுகள் வலுப்படும், இரு நாட்டு மக்களிடையே பிணைப்பு வெளிப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி - ட்ரம்ப் சந்திப்பின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. முக்கியமாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும். முன்னதாக அமெரிக்கா எஃகு இறக்குமதியில் 25 சதவீதமும், அலுமினியப் பொருள்களுக்கான இறக்குமதியில் 10 சதவீதமும் வரி விதித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா 28 பொருள்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. இதனால் அமெரிக்கா தனது வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் இந்தியாவை நீக்கியது. இந்நிலையில் இந்த மாதம் நடைபெறும் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பின்போது இந்த விவகாரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது ஹவ்டி மோடி என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதேபோல் டொனால்டு ட்ரம்ப் இந்தியா வரும்போது பிரம்மாண்ட கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீனாவில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இந்த நோய் சிக்கலில் இது ஒரு மோசமான நாளாக அமைந்தது. இதன் மூலம் சீனாவில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 908 ஆகியுள்ளது.

சூழல் இவ்வாறாக இருக்கும் போது, பொய் பரப்புரைகள் எங்களது முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. 34,800 பேருக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சீனாவை சேர்ந்தவர்கள். சீனாவில் இதுவரை 908 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸில் ஒருவர் பலியாகி உள்ளார்.

இப்படியான சூழலில் மீட்புப் பணியில் நமது கதாநாயகர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "இது போன்ற பொய் செய்திகள் நமது கதாநாயகர்கள் மேற்கொண்டுள்ள பணியை மேலும் சிரமமாக்கிவிடுகிறது," என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், உண்மையில் நாங்கள் வைரஸை எதிர்த்து போராடுவதைவிட, இதுபோன்ற பொய் செய்திகளை, கிண்டல்களை எதிர்த்துதான் அதிகம் போராடுகிறோம்.

சீனாவை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் அச்சமடைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்து எண்ணற்ற செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுவரை சீனாவில் மட்டும் 170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், அதன் பரவலை தத்தமது நாடுகளில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே அது எங்கிருந்து, எப்படி உருவானது? என்ற கேள்வி மக்களிடையே இருந்து வருகிறது. இந்த கேள்விக்கு தெளிவான பதில் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதுதொடர்பாக பல செய்திகள் இணையத்தில் உலாவி வருகின்றன. இப்படியான சூழலில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீதான அமெரிக்க அணுகுண்டுகளை விட, மைக்ரோவேவ் அடுப்புகளில் இருந்து வரும் "ரேடியோ அலைகள்" கடந்த 20 ஆண்டுகளில் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிப்பதாக ஹிரோஷிமா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டறிந்தனர்.

மைக்ரோவேவ் அடுப்புகளில் சூடேற்றப்பட்ட டேட் உணவு மிகவும் ஆரோக்கியமற்ற அதிர்வுகளையும் கதிர்வீச்சையும் கொண்டிருப்பதாக நிபுணர்கள் கண்டறிந்தனர். ஜப்பானில் உள்ள "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.

தென் கொரியா அனைத்து "மைக்ரோவேவ் ஓவன்ஸ்" தொழிற்சாலைகளையும் 2021 ஆம் ஆண்டிலும், சீனா 2023 ஆம் ஆண்டிலும் மூடும் திட்டத்தை அறிவித்தது.

புற்றுநோய் தடுப்பு குறித்த மாநாடு - காஷிரா புற்றுநோய் மையம்

1. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இல்லை
2. விலங்கு தோற்றம் இல்லாத பால் (பரிந்துரைக்கப்பட்ட சோயா பால்)
3. உணவு க்யூப்ஸ் இல்லை (மேகி போன்ற கோழி குழம்பு மசாலா)
4. சோடா இல்லை (லிட்டருக்கு 32 சர்க்கரை துண்டுகள்)
5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இல்லை
6. மைக்ரோவேவ் அடுப்புகள் இல்லை
7. எக்கோ கார்டியோகிராஃபி தவிர, மேமோகிராம் பி 4 பிறப்பு இல்லை
8. இல்லை மிகவும் குறுகிய உள்ளாடை மற்றும் ப்ரா
9. ஆல்கஹால் இல்லை
10. கரைந்த உணவை மீண்டும் உறைக்க வேண்டாம்.
11. குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் வைக்கப்படும் குளிர்ந்த நீரை குடிக்க வேண்டாம்.
12. பொதுவாக ஷேவிங் அல்லது குளித்த பிறகு பயன்படுத்தப்படும் டியோடரண்டுகளைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.

உங்கள் உணவில் இவற்றைச் சேர்க்க மாநாடு அறிவுறுத்துகிறது:
1. காய்கறிகள்
2. சர்க்கரைக்கு பதிலாக தேன் மிதமாக பயன்படுத்தப்படுகிறது
3. தாவர புரதங்கள் (இறைச்சிக்கு பதிலாக பீன்ஸ்)
4. பற்களைத் துலக்குவதற்கு முன்பு வெற்று வயிற்றில் உடல் வெப்பநிலையில் 2 கப் தண்ணீர்
5. உணவு சூடாக இருக்க வேண்டும், மிகவும் சூடாக இருக்கக்கூடாது
6. கற்றாழை சாறு + இஞ்சி + வோக்கோசு + செலரி + ப்ரோமலின் (வெறும் வயிற்றில் கலந்து குடிக்கவும்)
7. கேரட் ஜூஸ் தினமும்
8. தக்காளி, பூண்டு வெங்காயம் சாப்பாட்டுடன்.

அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் புற்றுநோய்க்கான காரணங்களைக் கண்டறிந்தது:

1. பிளாஸ்டிக் கோப்பையில் சூடாக எதையும் குடிக்க வேண்டாம்
2. காகிதம் அல்லது அட்டை அல்லது பிளாஸ்டிக் பையில் (எ.கா. வறுத்த உருளைக்கிழங்கு) போர்த்தப்பட்ட எதையும் சாப்பிட வேண்டாம்.
3. பிளாஸ்டிக் அல்லது மைக்ரோவேவ் உணவுகளில் சாப்பிட வேண்டாம்.

பிளாஸ்டிக் வெப்பத்திற்கு வெளிப்படும் போது, 52 புற்றுநோய் வகைகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் வெளியிடப்படுகின்றன.

புற்றுநோய் சர்க்கரைக்கு உணவளிப்பதால் "கோலா, பெப்சி, அவ், ஃபாண்டா மற்றும் அனைத்து செறிவூட்டப்பட்ட பழச்சாறுகளையும் நீங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய அன்னாசிப்பழங்களை சாப்பிடுங்கள், அன்னாசி கலவையைத் தவிர்க்கவும். இரவு 7 மணிக்குப் பிறகு கனமான உணவை உண்ண வேண்டாம்.

காலையில் அதிகமாகவும், மாலையில் குறைவாகவும் தண்ணீர் குடிக்கவும். சாப்பிட்ட உடனேயே கிடைமட்ட நிலையை (படுத்து தூங்க) எடுக்க  வேண்டாம்.

வாஷிங்டன்

அமெரிக்க  கடற்படை தளத்தை குறிவைத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்திய நிலையில், அரேபிய தீபகற்பத்தில் அல் கொய்தா அமைப்பை நிறுவியவரும், அல் கொய்தா  இயக்கத்தின் துணை தலைவருமான காசிம் அல் ரமி, அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா மற்றும் ஏமனை களமாக கொண்டு கடந்த 2009 ஆம் ஆண்டு அல்-கொய்தாவின் ஏகியூஏபி என்னும் பிரிவு தொடங்கப்பட்டது. அரேபிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான படைகள் உள்பட அனைத்து மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாக கொண்டு இது இயங்கி வந்தது.

ரமி, ஏமனில் உள்ள அப்பாவி மக்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியதாகவும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க படைகள் மீது பல தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் வெள்ளை மாளிகை வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்

துருக்கி நாட்டில் ஆகேயன் நகரில் இருந்து இஸ்தான்புல் விமான நிலையத்துக்கு பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானம் 177 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் வந்தது. அப்போது அங்கு பலத்த காற்றுடன் மழை பெய்துகொண்டிருந்தது. அந்த விமானம் ஈரமாக இருந்த ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டே விலகிச் சென்று மோசமாக தரை இறங்கியது. இதில் அந்த விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் விமானத்தின் உள்பாகங்கள் சேதமடைந்ததுடன், தீப்பிடித்துக் கொண்டது. உடனே அங்கு தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் விரைந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் வேகமாக தரை இறங்கினர். இதில் உயிர்சேதம் எதுவும் இல்லை என்றும், 52 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

Page 2 of 7

Latest Tweets

@LearnDashLMS Can you please check the message [ID: 139157]. Best Regards.
Turitor - Education WordPress theme now available on the Market. #education #lms #wordpress #themeforest… https://t.co/Y9N0ik9rDL
https://t.co/VLMm8getdq Please, grab the chance for WordPress Themes! #event #insurance #automobile #news #magazine… https://t.co/EOX8JlsT2k
Follow Themewinter on Twitter

Post Gallery

இந்திய இரயில்வேயின் அவலம்.

பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி

டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி - அமெரிக்க உளவுத்துறை

உருவ கேலியால் மனமுடைந்து தற்கொலை முடிவு - தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறிய சிறுவன்

ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்படாதவர்களை தரம் பிரிப்பதில் சிக்கல் - ஜப்பான் அரசு கவலை

தமிழகம் முழுவதும் மகா சிவராத்திரி விழாவையையொட்டி சிவாலயங்களில் நான்கு கால பூஜைகளுடன் சிறப்பு வழிபாடு

மாணவி அமுல்யா லியோனா செயலை ஏற்றுக் கொள்ள முடியாது - சித்தராமையா

உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

வேளாண் மண்டலத்துக்கான அரசின் நடவடிக்கை கானல் நீா் - மு.க.ஸ்டாலின்