Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
Super User

Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால். இவர் ஜீவஜோதியின் கணவர் பிரான்சிஸ் சாந்தகுமாரை கொலை செய்த வழக்கில், ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரை உடனடியாக சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்,கடந்த 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் மாடிப்படிகளில் ஏறமுடியாததால் வேனிலிருந்தே சரணடைந்திருந்தார்.இந்த வழக்கில் ராஜகோபாலனின் உதவியாளரான ஜனார்த்தன் மற்றும் ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.  ராஜகோபால் உடல்நிலை மோசமடைததால் அவர் அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. ஆனால் அங்கே மருத்துவவசதிகள் சரியாக இல்லை எனவே தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற அனுமதிக்கோரி அவரது மகன் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

தற்போதைய நிலையில் அவரை இடமாற்றுவது சிக்கலானது என ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கை விடுத்த நிலையில் அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு கூற ராஜகோபால் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு லட்சத்து 15 ஆயிரம் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த ஆய்வறிக்கை, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த பட்டியலிலுள்ள சிறுவர்கள் பள்ளிப் பருவத்திலேயே போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடுவதாகவும், போதைப் பொருள் விநியோகஸ்தர்கள் பள்ளி மாணவர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக போதைப் பொருட்களை வழங்கி, அவர்களை அடிமைப்படுத்தி விடுவதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இலவசமாக போதைப் பொருளைப் பெறுகின்ற சிறுவர்களுக்கு, ஒரு கட்டத்தில் இலவச விநியோகம் நிறுத்தப்படுவதாகவும், அதனையடுத்து அவர்கள் பணம் கொடுத்து போதைப் பொருள்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், எனவே போதைப் பொருளை வாங்குவதற்கான பணத்துக்காக, சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். சுற்றுலா பிரதேசங்கள் மற்றும் அவற்றின் அண்மையில் இருக்கும் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையும், சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடியாமையாதலும் அதிகமாகக் காணப்படுகின்றது, சிறுவர்கள் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாவதன் மூலம் அவர்கள் மலட்டுத் தன்மையை அடைவதாகவும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 18 வயதிற்குக் குறைந்த சிறுவர்களில் சுமார் 6,100 பேர் ஹெரோயினுக்கு அடிமையாகியுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் வரையானோர் ஹெரோயினை தேடி அலைவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 1,500 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போதைப்பொருளுக்கு அடிமையான சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, தேசிய அளவிலான நடவடிக்ககையை முன்னெடுக்குமாறு, போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் தேசிய அதிகார சபைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

 
 

ஜீவா- ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான கொரில்லா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கொரில்லா திரைப்படத்தை டான் சாண்டி இயக்கியிருக்கிறார். ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோருடன் ஒரு சிம்பன்சியும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறது. ஜீவா பகுதி நேர போலி டாக்டராகவும், பிக் பாக்கெட்டாகவும் நடித்திருக்கும் இந்த படம் வெளியான மறுநாளே கொரில்லா திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முழுமையாக தனது இணையதளத்தில் வெளியிட்டது.

இதேபோல நேற்று முன்தினம் வெளியான வெண்ணிலா கபடி குழு 2 படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இப்படி புதுப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவதால் சினிமாத் துறையினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். எனினும் தமிழ் ராக்கர்ஸை தடுக்க அவர்களுக்கு வழி தெரியவில்லை.

சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, நீர் மேலாண்மையில் அரசின் மெத்தனம் ஆகியவையே உண்மையான காரணம் என்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆங்காங்கே பொதுக் கூட்டங்கள் நடத்தியும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் அறப்போர் இயக்கத்தினர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 30 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தொடர்பாக ”சென்னை கேளு என் தண்ணீர் எங்கே கேளு” என்கிற ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாடகி சின்மயி, சூழலியல் செயல்பாட்டாளர்கள் பியூஸ் மனுஷ், நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்று தண்ணீர் பஞ்சம் அதற்கான காரணங்கள் குறித்து பொதுமக்களுடன் உரையாடினர்.

இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதி வழங்காத நிலையில் உயர் நீதிமன்றம் சென்று இதற்கான அனுமதியை பெற்று அறப்போர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக அறப்போர் இயக்கம் நடத்திய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சூழலியல் சார்ந்த பணிகளை அரசு முடக்கி வருவதாக அப்போது இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றம் சாட்டி வந்தார்

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில், அறப்போர் இயக்க நீர்நிலை குழு ஒருங்கிணைப்பாளர் ஹாரிஸ் சுல்தான் தலைமையில் பத்து செயல்பாட்டாளர்கள் தரமணி அருகே உள்ள கல்லு குட்டை ஏரியை பார்வையிட்டு அதில் கலக்கும் கழிவுநீர் பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த போது போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் தரமணி லிங்க் சாலையில் உள்ள ஹேமா மஹாலில் அடைத்து வைத்துள்ளனர்.

ஒரு புறம் சில விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை கண்டு வந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 148.2 சதவிகிதம் லாபம் கண்டுள்ளது. இதுவே கடந்த வருடத்தோடு ஒப்பிடும்பொது 449.8 சதவிகிதம் அதிகரித்து 139.7 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த முதல் காலாண்டில் நிகர விற்பனையானது 9.8 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,778.3 கோடியாக உயர்துள்ளது. இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது நிகர விற்பனையானது ஆண்டுக்கு 24.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் ஆண்டுக்கு 52.6 சதவிகிதம் அதிகரித்து, (இதுவே காலாண்டுடன் ஒப்பிடும்போது 8.8 சதவிகிதம் அதிகரிக்கலாம்) ரூ. 554.5 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முக்கிய காரணம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டதே என்றும் கருதப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் பிரச்சனையால் தனது உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு சேவையை வழங்கி வந்த இந்த நிறுவனம், கடன் பிரச்சனையால் தவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமலும், செயல்பாட்டு மூலதனம் இல்லாமலும் இருந்தது. இந்த சூழ்நிலையில் எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே ,இந்த நிறுவனம் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதனால் இந்த விமானத்தின் பற்பல வாய்ப்புகள், மற்ற விமான நிறுவனங்களுக்கு கிடைத்தது. இந்த நிலையில், மலிவான விலைக்கு விமான சேவை கொடுத்து வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு இது சாதகமான விஷயமாகவே அமைந்தது. இதனால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் லாபத்தை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அப்தாப் ஆலம் 54 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்கியிருந்த சவுத்தாம்டன் மைதானத்தில் பெண் ஒருவருடன் அப்தாப் ஆலம் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் அவர் மீது விசாரணை நடத்தியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வீரர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறி அவர் செயல்பட்டது உறுதியானது. இதனால் உள்ளூர் மட்டும் சர்வசேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒராண்டு தடை விதித்து உள்ளனர்.

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடைசி வரை போராடிய இந்திய அணி இதில் தோல்வியை தழுவி உள்ளது.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக தகவல்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். ``தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம். அதில், நாம் யாரும் தலையிடக்கூடாது. அவரது முடிவுக்கு மற்றவர்கள் மதிப்பு தரவேண்டும். அவருக்கான இடத்தைக் கொடுக்க வேண்டும். அனைவரும் அவரவர், யூகங்களை தவிர்த்துவிட்டு, தோனி இந்திய அணிக்கு ஆற்றிய பங்களிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். அணிக்கு இவ்வளவு பங்களிப்பு செய்த, அவர் தான் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் மக்கள் அவர் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தருவார் என நம்புகின்றனர். அவர் வெளியில் இருக்கும்வரை ஆட்டம் முடிவதில்லை” என்றார்.

தோனியின் ஓய்வு குறித்து கோலி: "இதுவரை அவர் ஓய்வு குறித்து எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.

தி.மு.க சார்பில் மக்களவைக்கு போட்டியிடும், வில்சன், சண்முகம் மற்றும் வைகோ ஆகியோர் வேட்பு மனுதாக்கல்  செய்தனர். சென்னை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுக்களை அளித்தனர். இந்நிகழ்வில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Page 1 of 6

Latest Tweets

RT @WCDhaka: You asked and we responded. 2nd Phase tickets on Sale. Get ready. Date: Thursday, 11th July 2019 Time: 4:00pm Per Ticket: 1000…
Deliciko - Restaurant WordPress Theme released on #Themeforest #WordPress #wordpresstheme https://t.co/77NycEKCkB https://t.co/rqMZzumjRJ
Conference Event WordPress Theme -> 2 New Home Added #wordpress #event #conference #wordpresstheme #themeforest… https://t.co/RnzM5q7gY7
Follow Themewinter on Twitter

Post Gallery

சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - நீதிமன்றம் அனுமதி

இலங்கையில் 1,15,000 சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை - ஆய்வில் கண்டுபிடிப்பு

கொரில்லா படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

ஏரியை ஆய்வு செய்த அறப்போர் இயக்கத்தினர் கைது

அதிக இலாபம் ஈட்டிய ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை

கிரிக்கெட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெறுவது, அவரது தனிப்பட்ட விருப்பம் - சச்சின் டெண்டுல்கர்

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு

புழல் சிறையில் அடைக்கப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்