Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Reload Captcha
Super User

Super User

Selfies labore, leggings cupidatat sunt taxidermy umami fanny pack typewriter hoodie art party voluptate. Listicle meditation paleo, drinking vinegar sint direct trade.

டெல்லி

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் தி.மு.க வேட்பாளருமான கதிர் ஆனந்தின் கல்லூரி, பள்ளி மற்றும் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டன.

பணப்பட்டுவாடா காரணமாக வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும் என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தேர்தல் ரத்து செய்யப்படுமா அல்லது இல்லையா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் தலைமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் தொகுதியில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் களமிறக்கப்பட்டனர். இது மட்டுமல்லாது அமமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு பின்னால், அரசியல் அழுத்தம் உள்ளதாக துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது. பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி உள்ளது. 17வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. இன்று மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடந்தது.
 
மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மே 19ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. அதன்பின் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

சென்னை

பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் என பல்கலை. முன்னாள் துணைவேந்தர்கள், முன்னாள் நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பல்கலை. முன்னாள் துணை வேந்தர்கள் மற்றும் முன்னாள் நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில் மத்திய அரசு அலுவலகங்களில் பா.ஜ.கவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம்.

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் சொல்லியிருக்கிறார் 2019 தேர்தல்தான் இறுதி தேர்தலாக இருக்கும் என்று. அப்படியென்றால் என்ன அர்த்தம்? அதற்கு பிறகு ஜனநாயகம் இருக்காது, சர்வாதிகாரம்தான் இருக்கும். ஒரு தலைவனின் காலில் மண்டியிடுகிற எதேசதிகார போக்கு நிலவும்.

ஜனநாயக நாட்டினுடைய நிறுவனங்களெல்லாம் இன்று நாசப்பட்டுள்ளன. அவற்றினுடைய சுய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுவிட்டன. எந்த நிறுவனமும் இன்றைக்கு நம்பிக்கைதன்மை போன்றதாக இல்லை. அதனால் ஜனநாயகத்தினுடைய அடிப்படைகள் எல்லாம் இன்று ஒழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

இந்த 5 ஆண்டுகள் இதே ஆட்சி மீண்டும் வந்துவிட்டது என்றால் அதன் விளைவு மிக கொடூர விளைவாக இருக்கும். நாட்டின் அனைத்து நிறுவனங்களும் அடகு வைக்கப்பட்டுவிட்டன. இதை கல்வித் துறையில் நாங்கள் மிக அதிகமாக பார்த்து கொண்டிருக்கிறோம். இந்திய வரலாற்று நிறுவனத்தில் வரலாறு தெரியாதவர்களே பணியில் உள்ளனர். கல்வியை மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் கொண்டு செல்ல பா.ஜ.க முயற்சி செய்கிறது.

மக்களுடைய பேச்சுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை, வழிபாட்டு உரிமை, திருமண உரிமை என அனைத்தும் இன்று மறுக்கப்படுகின்றன. ஆகையால் இந்தியா என்றாலே பன்முகத்தன்மை என்ற ஒரு கலாசாரத்தை அழித்து ஒழித்து ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே நிறம் என இந்துத்துவ கலாசாரத்தை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது.

இந்த ஒரு சனாதன கலாசாரத்தை மீண்டும் இந்த நாட்டில் நிலவ பா.ஜ.க சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகிறது. எனவே இவற்றையெல்லாம் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் முன்னால் இருக்கும் அபாயம் என்ன என்பதை புரிந்து கொண்டு இந்த நாடு ஜனநாயக நாடாக, சுதந்திர நாடாக, எதேசதிகாரத்தை தூக்கி எறிந்த நாடாக, அரசியல் சாசன விழுமியங்களை ஏற்றுக் கொண்ட நாடாக இருக்க போகிறதா என்பதை உணர்ந்து உங்கள் வாக்குகளை போட வேண்டும் என்றனர்.

 


காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அன்புமணி ராமதாஸ்,    "எதிரணியில் உள்ள திமுகவினரிடம் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு தானே வர வேண்டும். வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம். நாம் மட்டும் இருந்தால் என்ன நடக்கும்" என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து எதிர்க்கட்சிக்கு செல்லும் வாக்குகளை செல்லவிடாமல் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், அவரது பேச்சுக்கு தி.மு.க. கடும் ஆட்சேபணை தெரிவித்தது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் நோக்கத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்ததாக, தேர்தல் ஆணையத்தில் தி.மு.க சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய திருப்போரூர் தேர்தல் அதிகாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தென்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் விருப்பத்திற்கேற்ப கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என கடந்த 31-ந்தேதி அக்கட்சி மேலிடம் அறிவித்தது.

ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தோற்று விடுவோம் என பயந்துதான் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக பா.ஜனதா தலைவர்கள் கேலி செய்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் வர்தாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘அமைதியை விரும்பும் இந்து மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியவர்கள் தான் காங்கிரசார்.

அதனால் தான் பெரும்பான்மை சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் தொகுதிகளில் நிற்பதற்கு தயங்கி, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதியில் போட்டியிடுகிறார்கள்’ என ராகுல்காந்தியை தாக்கி பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பிரதமர் மோடி இழிவுபடுத்தி பேசி உள்ளார். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற படபடப்பில் மோடி பேசி உள்ளார்.

பல்வேறு மொழி, கலாசாரம், மதம் கொண்ட தேசத்தை பிரதமர் அவமானப்படுத்தி உள்ளார்.

சுதந்திர போராட்டத்தையும், தென் இந்திய மக்களையும் பிரதமர் மோடி களங்கப்படுத்தி உள்ளார். எனவே பிரதமர் மோடி தனது பேச்சுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் இதனை கருத்தில் கொண்டு மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

இன்று (புதன்கிழமை) மாலை கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வருகை தர உள்ள அவர் நாளை அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

 
 

Pityful a rethoric question ran over her cheek When she reached thre first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

The Big Oxmox advised her not to do so, because there were thousands of bad Commas, wild Question but the Text didn’t listen her seven versalia, put her initial into.

Separated they live in Bookmarksgrove right at the coast of the Semantics, a large language ocean. A small river named Duden flows by their place and supplies it with the necessary regelialia. It is a paradisematic country, in which roasted parts of sentences fly into your mouth.

Pityful a rethoric question ran over her cheek When she reached the first hills of the Italic Mountains, she had a last view back on the skyline of her hometown Bookmarksgrove, the headline of Alphabet Village and the subline of her own road, the Line Lane.

Page 1 of 5

Latest Tweets

Construction WordPress Theme new release on ThemeForest #wordpresswebsite #builder #construction #Theme #business… https://t.co/Io448v2QA2
RT @hanahamrouni7: This young man defended humanity spontaneously, there was no other way for him though to make an end for extremism and r…
RT @LatuffCartoons: Let's call things by their proper name. What we had in #Christchurch New Zeland is an act of WHITE SUPREMACY TERRORISM!…
Follow Themewinter on Twitter

Post Gallery

வேலூர் தொகுதிக்கு தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி உத்தரவு

முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

பா.ஜ.கவுக்கு வாக்களிக்க வேண்டாம் - முன்னாள் நீதிபதிகள், துணை வேந்தர்கள் கோரிக்கை

“வாக்குச்சாவடிகளில் நாம் தானே இருப்போம்” என்று பேசிய அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

சிறுபான்மை சமூகம் குறித்து சர்ச்சைக்கருத்துக்கு மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் – ராகுல் காந்தி

Netcix cuts out the chill with an integrated personal trainer on running

Hynopedia helps female travelers find health care in Maldivs

Here's how to make Kevin's famous fish cutlet from 'The Office'

19 incredible photos from Disney's 'Star Wars' cruise algore