பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார். பெண்களுக்கு துன்பம் விளைவித்தலைத் தடை செய்கின்ற விதிகளைத் திருத்தம் செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, ”பெண்களைப் பின்தொடர்ந்தால் 5 ஆண்டுகள் வரை சிறை கிடைக்கப்படும். ஜாமீனில் வெளிவர முடியாத அம்சம் அறிமுகம் செய்யப்படும். பாலியல் வன்கொடுமைக்கு 14 ஆண்டுகளுக்குக் குறையாமல், கடுங்காவல் தண்டனை சிறை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.