தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெஞ்சை பதறவைக்கும் கொடூரமான பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கல்லூரி மாணவியை வீடியோ எடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் அளித்த புகாரின் கீழ் சபரிராஜன் திருநாவுக்கரசு வசந்தகுமார் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களின் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தநிலையில் ஹெரான்பால், அருளானந்தம் ,பாபு ஆகிய மூன்று பேர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தினந்தோறும் விசாரித்து 6 மாத காலகட்டத்தில் வழக்கை முடிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.