தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதையடுத்து,...
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பா.ச.க. செய்தி தொடர்பாளர்கள் மீதும், மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அவர்களை கைது செய்ய மறுக்கும் இந்திய அரசின் போக்கினை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு செய்தவர்களை எதிர்த்து நாடெங்கும் அமைதியான முறையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சியினை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்த்து போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே இத்தகைய போக்கு உதவும். சனநாயக சக்திகள் அனைத்தும் இணைந்து இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருமாறு வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா காலக்கட்டத்தில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றதாக கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதில் 417 மாணவிகள் 11ம் வகுப்பு படித்தவர்கள் ஆவர்.
இந்த மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து படிப்பை தொடர்வதற்கு கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே வீட்டிலிருந்தே பணி செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
அந்நாடு பொருளாதார சிக்கலில் உள்ள நிலையில், அவர், பிரதமர்களுக்கான அலறி மாளிகை எனக்கு வேண்டாம், அரசின் செலவினங்களை குறைக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது.
இந்த நடவடிக்கையை அமைச்சர்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு, இலங்கை அரசு அவசரகால மருத்துவ உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையின் மருந்து தேவையில் 85% இறக்குமதி மூலம் பெறப்பட்டு வந்த நிலையில், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால், மருந்துகளை இறக்குமதி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறது.
இதனால், அவசரத் தேவையுள்ள மருந்துகளின் பட்டியலை இந்தியாவுக்கு அனுப்பி உதவி கேட்டிருக்கிறது.
கொழும்பு
இலங்கையில் இதுநாள் வரை பெட்ரோல், டீசல், உணவுப் பொருட்களுக்கு மட்டுமே கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், இப்போது அங்கு அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகளுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளது அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைப்பு.
மின்வெட்டு, அத்தியாவ மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அந்நாட்டு மக்கள் பலர் அவசர அறுவை சிகிச்சைகளைக் கூட செய்து கொள்ள முடியாத இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் மருத்துவ அலுவலகர்கள் கூட்டமைப்பானது அவசர பொதுக் கூட்டத்தை நடத்தியது. அதில் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் பேசிய இலங்கை அரசு மருத்துவ அலுவலர்கள் கூட்டமைபபின் (GMOA) செயலர் மருத்துவர் ஷனல் ஃபெர்னாண்டோ, "நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவ அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நிர்வாகத் திறனின்மையாலே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். இதேநிலை நீடித்தால் இன்னும் நிலைமை...
சென்னை
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததால் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை ரத்து செய்ய நீதிபதி சந்திரசேகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மறைந்த திரைப்பட நடிகர் விவேக் அவர்களின் மனைவி அருட்செல்வி இன்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பில் நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டுமென்று கோரிக்கை கடிதம் அளித்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் நாளை (ஏப்ரல் 13-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியேட்டர்களில் வெளியாகாது என்று மாநகராட்சி திரையங்க உரிமையாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர்.
திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூர் மாநகராட்சிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
குருபூஜையன்று தருமபுரம் ஆதீனத்தைப் பல்லக்கில் பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.
ஆதீனங்கள் பல்லக்கில் சென்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுமென்பதால் அதற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். மடத்துப் பிரச்சினையை மத பிரச்சனையாக ஆக்கியது யார்?
அரசியல்வாதி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆன்மீகவாதி பேசக்கூடாதா? என, மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
அன்னதானம் வழங்கும் திருக்கோயில்களில் இன்று முதல் இலையில் உணவு வழங்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திங்கள் முதல் வியாழக்கிழமை வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
292வது மடாதிபதி அருணகிரிநாதர் மறைவை தொடர்ந்து 293வது மடாதிபதியாக ஹரிஹரர் தேசிகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் இளவரசராக முடிசூட்டப்பட்டவர் ஹரிஹரர் தேசிகர்.
மதுரை ஆதீனமாக ஹரிஹரர் தேசிகருக்கு 10 நாளில் முடிசூட்டப்பட உள்ளதாக திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில், படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு விமான நிலையம் - விம்கோ நகர் பணிமனை, பரங்கிமலை - சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
தொடங்கியது முதல் இந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை, 12.28 கோடி பேர் பயணித்துள்ளனர்.
இந்த ஆண்டில் ஏப்ரல் 30ம் தேதி வரை 1.47 கோடி பேர் பயணித்துள்ளனர்.
இந்தியாவில் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கியா நிறுவனம் முதல் EV6 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
இந்தக் கார் மிகவும் எளிமையானதாகவும், நவீன தொழில்நுட்ப வசதியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
காருக்கான முன்பதிவு மே 26, முதல் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் ஆப்பிள் iPhone4s வாங்கியவர்கள் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இச்சாதனத்தில் iOS9யை தரவிறக்கியபோது, மொபைலின் செயல்திறன் குறைந்ததாகவும் மற்றும் தவறாக விளம்பரப்படுத்தப்பட்டது எனவும் வழக்கில் கூறப்பட்டது.
இதனால் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1,154 நஷ்டஈடு தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
துபுல் ரயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் 6 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 15 பேர் ராணுவ வீரர்கள். மேலும் 40பேரை காணவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து அரசை கவிழ்த்தார்.
பின்பு பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த அவர் மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. மாநில முதல்வராக பகவந்த் மான் உள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஜூலை 1ம் தேதி முதல் மாதம் ஒன்றுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்கள் கூடுதல் யூனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.
ஈரானின் வளைகுடா கடற்கரை பகுதியில் உள்ள ஹர்மொஸ்கன் மகாணத்தில் இன்று (ஜூலை 2) அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளன என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என கருதப்படுகிறது.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகர் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஜூன் 5) சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தேவாலயத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.
கனடாவில் கைத்துப்பாக்கி விற்பனையை முடக்குவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்த வாரம் 19 குழந்தைகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து கனடாவில் நேற்று இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருவதால் புதிய நடவடிக்கைகள் தேவை என ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.
துப்பாக்கி இறக்குமதி மற்றும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் மற்றும் பாதுகாப்புக் காவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மூலம் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார்.
இது குறித்து அவர், மிகவும் மகிழ்ச்சி, பெருமை. உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் என் கனவு.
அணியின் ஒரு பகுதியாக இருப்பதை நன்றியுடன் உணர்கிறேன் என்று நெகிழ்ந்துள்ளார்.
ஐசிசி சிறந்த டெஸ்ட் பேட்டருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
NZக்கு எதிரான போட்டியில் ENG வீரர் ஜோ ரூட், அபார சதமடித்ததன் மூலம், தரவரிசைப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2ம் இடத்தில் உள்ளார்.
PAK கேப்டன் பாபர் அசாம், ஒரு இடம் முன்னேறி 4ம் இடத்தில் உள்ளார்.
ரோகித் சர்மா 8ம் இடத்திலும், விராட் கோலி 10ம் இடத்திலும் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
சென்னை அணியின் நட்சத்திர வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டிவைன் பிராவோ இன்றைய போட்டியில் 9 ரன்களை எடுத்தால், ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.
உத்தரப்பிரதேசத்தில், பப்ஜி விளையாட தடைவிதித்த அம்மாவை 16 வயது மகன் சுட்டுக்கொன்றுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றும் அவரது அப்பாவின் துப்பாக்கியால், கடந்த ஜூன் 4ம் தேதி இரவு சுட்டுக்கொன்றுவிட்டு, உடலை வீட்டிலேயே மறைத்துவிட்டார்.
தனது தங்கையை மிரட்டி, வீடு முழுக்க ரூம் பிரெஷ்னர் பயன்படுத்தியிருக்கிறார்.
உடல் அழுகி நாற்றமெடுக்கவே நேற்றிரவு இவ்விவகாரம் வெளியே தெரிந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமராபாத் பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சிலர் உரிய முறையில் மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.
இதையறிந்த மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட மருந்து கடைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கோவிந்தசாமி, ஜெயபால் என்ற இருவர் நர்சிங் மற்றும் ஹோமியோபதி படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில், சுற்றுலா பயணிகள் சவாரி சென்ற வாகனத்தை யானை ஒன்று துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.
வனப்பகுதிக்குள் சவாரி சென்ற சுற்றுலா பயணிகள் அங்கிருந்த யானைகளை கண்டு ரசித்தனர்.
அப்போது திடீரென ஒரு யானை, வாகனத்தை துரத்தி ஓடி வந்தது.
சாதுரியமாக செயல்பட்ட ஓட்டுநர், வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால், யானை சென்றுவிட்டது.
இதனை சுற்றுலா பயணி செல்போனில் பதிவு செய்த காட்சி வெளியாகியுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சர்க்கரை சேர்த்துக் கொள்ளக் கூடாது.
ஆனால் காபி குடிக்கும் போது இனிப்பு தேவையெனில், அவர்களுக்கு கருப்பட்டி சிறந்த தீர்வாக இருக்கிறது.
பனை மரத்திலிருந்து உருவாக்கப்படும் கருப்பட்டி உணவு வகைகளில் இன்றியாமையாததாகும்.
இதில் உள்ள சோடியம், பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்துகிறது.
தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.
ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.
ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.
ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...