தாலிக்கு தங்கம் திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் இப்பொழுது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும் அல்லது வேறு ஏதாவது திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருந்தாலும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பித்தனர் தள்ளுபடி செய்யவேண்டும்.
அதுமட்டுமில்லாமல் மணமகளுக்கு 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் நிறைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் நபர்கள் கார் வைத்திருக்கக்கூடாது, மாடி வீடு இருக்க கூடாது, அப்படி இருந்தால் மனு தள்ளுபடி செய்யவேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ 72,000 இருப்பதை வருமான சான்றிதழை அரசு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் திருமண நிகழ்ச்சி திருமண மண்டபங்களில் நடந்திருந்தால் தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.