மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம் தலைமையிலான மனிதவுரிமை குழுவுடன் சமதா கட்சி மற்றும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் ஆலோசனை நடத்தியது.
ஈழத் தமிழர்கள் நிலையை எவ்வாறு சீரமைப்பது என்பது குறித்தும் இந்தியா முழுவதும் உள்ள, மனித உரிமை மீறல்களை எதிர்க்கின்ற அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டன.
நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மணிப்பூர் மாநில முன்னாள் முதலமைச்சர் ராதாபினோத் கொய்ஜாம், சமதா கட்சியின் அகில இந்திய முதன்மை பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், ஈழத் தமிழர் நட்புறவு மைய பிரதிநிதிகள் பேராசிரியர் ராமு.மணிவண்ணன் மற்றும் பொன்னம்பலம், கே.டி.சிங், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், கோவா (ஓய்வு), லெப்டினென்ட் ஜெனரல் ஹிமாலை கொன்சம் (ஓய்வு) மற்றும் பப்லு லோய்டோங்பாம், எக்சிகுடிவ் டைரக்டர், ஹியூமன் ரைட்ஸ் அலெர்ட் – மணிப்பூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.