சென்னை
சென்னையில் 26 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், மதுரையில் 4, தி.மலையில் 2, சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையங்களை கண்காணிக்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.