தெலங்கானாவில் மெட்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை தத்தெடுத்துள்ள நாகார்ஜுனா, அதை பராமரிக்க 2 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
மறைந்த தனது தந்தையும் நடிகருமான அக்கினேனி நாகேஸ்வர ராவின் பெயரில் இந்தப் பணிகளை மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த வனத்தை நகர்ப்புற பூங்காவாக அவர் அமைக்கிறார். ஆயிரம் ஏக்கர் பரப்பில் ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பதோடு, மேலும் மரக்கன்றுகள், பசுந்தாவரங்கள் நட்டு வளர்க்கவும் நாகார்ஜுனா திட்டமிட்டுள்ளார்.