நியூயார்க்
ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த மேலும் 25 பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை 127 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தகவல் அளித்துள்ளது.
இதனிடையே உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.