கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒவ்வொரு எம்பியும் 10 மாணவர்களை சேர்க்க சிபாரிசு செய்யலாம்.
இதன்மூலம் ஆண்டுக்கு 7880 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எம்பிக்கள் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது.
ஓய்வுபெற்ற கேவி ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் பேரப்பிள்ளைகள், பள்ளி நிர்வாக குழு தலைவரின் விருப்ப ஒதுக்கீடு ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.