Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு - மருத்துவர் கைது

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு – மருத்துவர் கைது

சேலம் அருகே தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறி, தனியார் மருத்துவமனையை உறவினர்கள் அடித்து நொறுக்கினர்.

சேலம் மாவட்டம் சவுரியூரை சேர்ந்த பெண் ஒருவர், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக எடப்பாடியில் உள்ள அரவிந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, மருத்துவர் தவறான சிகிச்சையளித்து பின்னர் அதனை சரிசெய்ய 3 முறை அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், அஜீரண கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தவறான சிகிச்சையளித்த மருத்துவரை போலீசார் கைது செய்து மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments