ஒகேனக்கல் அருவியின் சீரமைப்பு முடிவுற்றதாலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வருவதாலும் 86 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் குளிக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பிரதான அருவியில் கூட்டம் அதிகரித்துள்ளது.