கோமாளி திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கடந்த நான்காம் தேதி வெளியானது.
இந்த திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாக முதல் நாளிலிருந்து லவ் டுடே திரைப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதற்கு பலனாக தற்போது தமிழகத்தில் மட்டும் இதுவரை 42 கோடியே 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த திரைப்படம் ஆறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்ததால் அதிகப்படியான வசூலை ஈட்டி வருகிறது. 42 கோடியே 50 லட்சம் ரூபாய் மொத்த வசூலை இதுவரை ஈட்டி உள்ள நிலையில், அதில் 20 கோடி ரூபாய் ஷேர் தொகையாக தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.