Thursday, February 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜன.22 ஆம் தேதி பொது விடுமுறை – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி ஜன.22 ஆம் தேதி பொது விடுமுறை – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி வரும் ஜனவரி 22ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு பொது விடுமுறை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி மிகக் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் மாநில அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழாவையொட்டி பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத

இந்நிலையில், ஜனவரி 22ஆம் தேதி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி ஊழியர்களின் உணர்விற்கும் மதிப்பளித்து அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக தினத்தை ஒட்டி ஜனவரி 22ஆம் தேதி பொது விடுமுறை என முதல்வர் ரங்கசாமி  தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments