ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.,வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி பழங்குடியின தலைவரை துன்புறுத்துவது தரம் தாழ்ந்தது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது மூலம் பா.ஜ.க வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
விரக்தியின் வெளிப்பாடாக அதிகார அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை ஹேமந்த் சோரன் கைது வெளிக்காட்டுகிறது. பா.ஜ.க வின் அநாகரிகமான யுக்திகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க முடியாது. பா.ஜ.க வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு பணிந்து போகாமல் ஹேமந்த் சோரன் வலுவுடன் எதிர்த்து நிற்கிறார். அடக்குமுறைகளை தாண்டி பா.ஜ.க வுக்கு எதிரான போரில் உறுதி காட்டும் சோரனின் நிலைப்பாடு பிறருக்கு ஊக்கம் தரக்கூடியது. இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.