மும்பை
மராட்டியத்தின் பந்தாரா மாவட்டத்தில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி உள்ளனர். வெறும் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பவர்களும், கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி.யை செலுத்தும் நிலை உள்ளது.
நாட்டின் எதிர்காலத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியமானது ஆகும். எனவே மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் இது நடத்தப்படும். தன்னை பிற்படுத்தப்பட்டவர் என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, அந்த பிரிவினருக்காக கடந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன? என்பதை கூற வேண்டும்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அதானி நிறுவனங்களின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.