Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமா"தக் லைஃப்" படத்தின் ஓவர்சீஸ் விநியோகம் 63 கோடி ரூபாய்

“தக் லைஃப்” படத்தின் ஓவர்சீஸ் விநியோகம் 63 கோடி ரூபாய்

நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் நாயகன் படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு தக் லைப் என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் .

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது.

சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். கமலுக்கு மகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிம்பு கதாபாத்திரத்தின் ப்ரோமோ கிலிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த உரிமையை மட்டும் 63 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

- Advertisment -

Most Popular

Recent Comments