இந்தியாவில் எலக்ட்ரிக் டூ வீலர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புத்தம் புதிதாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
அந்த வரிசையில் இப்போது டிவிஎஸ் வந்துவிட்டது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தையும் அறிமுகப்படுத்த உள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெவ்வேறு திறனுடனான பேட்டரிகளைக் கொண்ட ஐகியூப் மாடல்களை உருவாக்க டிவிஎஸ் நிறுவனம் தீவிரமாக முனைந்துள்ளது.
அந்த வரிசையில் இப்போது டிவிஎஸ் வந்துவிட்டது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தையும் அறிமுகப்படுத்த உள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வெவ்வேறு திறனுடனான பேட்டரிகளைக் கொண்ட ஐகியூப் மாடல்களை உருவாக்க டிவிஎஸ் நிறுவனம் தீவிரமாக முனைந்துள்ளது. விலையும் மார்க்கெட்டுக்கு இருக்கும் எனத் தெரிகிறது.
நிறுவனத்தின் விரிவான விற்பனை நெட்வொர்க்கின் மூலம் அதிக வாடிக்கையாளர்களை ஐக்யூப் கவர்ந்துள்ளது. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதாக டிவிஎஸ் அறிவித்தபோதும் இந்த வாகனங்களுக்கு அரசு தரும் மானியங்கள் தொடர்பான முடிவுகள் நிலுவையில் இருப்பதால் புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகமும் தாமதமாகிறது. ஃபேம் இரண்டு மானியத் திட்டம் முடிவடைந்து எலக்ட்ரிக் மொபில்லி புரோமோஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் டிவிஎஸ் தனது தயாரிப்புகளை நிதானப்படுத்துகிறது.
டிவிஎஸ்ஸின் இந்த எச்சரிக்கையான அணுகுமுறை, கிடைக்கும் ஊக்கத்தொகைகளின் சரியான பயன்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், வளர்ந்து வரும் எலக்ட்ரிக் சந்தையின் போக்கை வழிநடத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.