பெங்களூரு
பிரஜவல் ரேவண்ணா இந்தியா வந்து சரணடைந்து வழக்கை சந்திக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மகனான ரேவண்ணா மகன் பிரஜ்வல் ரேவண்ணா, இவர் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக புகார் எழுந்தது, சிறப்பு விசாரணைக்குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரஜ்வெல் ரேவண்ணா தற்போது வெளிநாட்டில் உள்ளார். இந்தியா வந்தால் தாம் கைது செய்யப்படுவோம் என வராமல் உள்ளார்.
இந்நிலையில் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியது, ஆபாச வீடியோ விவகாரம் குறித்து நான் பேசவில்லை. இருப்பினும் பிரஜ்வல் ரேவண்ணா விரைவில் இந்தியா வந்து சரணடந்து வழக்கை சந்திப்பது தான் நல்லது என்றார்.