Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசரியான நேரத்தில் "இந்தியா" கூட்டணி ஆட்சி அமைக்கும் - மம்தா பானர்ஜி

சரியான நேரத்தில் “இந்தியா” கூட்டணி ஆட்சி அமைக்கும் – மம்தா பானர்ஜி

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களின் கூட்டம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவைக் குழுத் தலைவர் சுதீப் பந்த்யோபாத்யாய் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மக்களவை துணைத் தலைவராக ககோலி கோஸ் தஸ்திதார் தேர்வு செய்யப்பட்டார். மக்களவை கொறடாவாக கல்யாண் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார். மம்தா: மேலும், மாநிலங்களவைக் குழுத் தலைவராக டெரெக் ஓ பிரையன், மாநிலங்களவை துணைத்தலைவராக சகரிகா கோஸ், மாநிலங்களவை கொறடாவாக நதிமுல் ஹக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இந்தியா கூட்டணி தக்க நேரத்தில் ஆட்சியை அமைக்கும் என அவர் கூறியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி விரைவில் மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், ஓரிரு நாட்கள் மட்டுமே நீட்டித்த அரசுகளும் கூட இருந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான, சட்ட விரோதமாக ஆட்சி அமைக்க முயல்கிறார். அதற்கு என்னால் வாழ்த்து சொல்ல முடியாது. பெரும்பான்மையான மக்கள் பாஜகவை நிராகரித்தே உள்ளனர். அதேநேரம் எனது வாழ்த்துகள் நாட்டுக்காக இருக்கும். இப்போது தேர்வான அனைத்து எம்.பி.க்களுக்கும் அவர்கள் கட்சிகளை வலுப்படுத்துவார்கள் பாஜகவை நாங்கள் உடைக்க மாட்டோம்.. ஆனால் உங்கள் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும்.. அது ஏற்கனவே ஏற்பட ஆரம்பித்துவிட்டது போலவே தெரிகிறது.. உங்கள் கட்சியில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது பார்த்தாலே தெரிகிறது” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும் பாஜக 300+ இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்திருந்த நிலையில், இந்த முறை தனிப்பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. 240 சீட்களில் வென்ற பாஜக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கிறது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக நாளை பிரதமராகப் பதவியேற்கிறார்.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “எனக்கு அழைப்பு வரவில்லை.. எனவே போக மாட்டேன்” என்று மட்டும் மம்தா பதிலளித்தார். தக்க நேரத்தில் ஆட்சி அமைப்போம்: தொடர்ந்து பாஜகவைக் கடுமையாக விமர்சித்த அவர், “400 இடங்களில் வெல்வோம் என்றவர்களால் தனிப்பெரும்பான்மை கூட பெற முடியவில்லை. இந்தியா இப்போது ஆட்சியை அமைக்க உரிமை கோரவில்லை என்பதற்காக அது நடக்காது என்று இல்லை.. சில அரசுகள் ஓரிரு நாட்கள் மட்டுமே கூட இருந்துள்ளது என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். இந்த அரசு 15 நாட்கள் நீடிக்குமா இல்லை அதற்குள் கவிழுமா என்பது யாருக்குத் தெரியும்? என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்.. நேரம் வரும்போது இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments