Thursday, July 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்புப்பெட்டி – ராகுல்காந்தி

இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்புப்பெட்டி – ராகுல்காந்தி

புதுடெல்லி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பங்கள் மூலம் முறைகேடு செய்ய முடியும் என்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் எலான் மஸ்க்கின் கருத்துக்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்பது ஒரு கறுப்புப்பெட்டி. இந்தியாவில் மின்னணு வாக்கு இயந்திரத்தை ஆராய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. நமது தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்படுகின்றன. அமைப்புகள் பொறுப்பேற்க முடியாத நிலையில் ஜனநாயகம் ஏமாற்று நாடகமாக மாறி மோசடிக்கு ஆளாகிறது என பதிவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

Recent Comments