ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகம் இடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குண்டூர் மாவட்டம், மங்களகிரி-தாடேபள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 202/A1-இல் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி (YSRCP) அலுவலகத்தை அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வந்தது என்ற காரணம் கூறப்பட்டு இடிக்கப்பட்டுள்ளது.
நிலத்தை ஒப்படைப்பதற்கு முன் கட்டுமானங்களைத் தொடங்குவது சட்டத்தை மீறிய செயல் என்று நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக மங்களகிரி-தாடேபள்ளி பேரூராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்குள் இடித்துத் தள்ளி, பாகுபாடான, பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதாக தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு மீது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.