அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாக பைடன் மற்றும் டிரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்றுள்ளனர். விவாதத்தில் கருக்கலைப்பு விவகாரம் தொடர்பான வாதங்கள் சூடுபிடித்தன. ஆப்கானிலிருந்து அமெரிக்க படை வெளியேறியதற்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். பணவீக்கம் குறித்து அதிபர் பைடனை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த விவாதங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஜோ பைடன் மற்றும் டொனால்ட் டிரம்ப் இடையே நடந்த முதல் விவாதத்தில் டிரம்ப் வெற்றிபெற்றதாக 67% பார்வையாளர்கள் கருத்து! CNN செய்தி தொலைக்காட்சியில் நடந்த அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் விவாதத்தில் பைடன் மோசமாக செயல்பட்டதால் வேறு வேட்பாளரை நியமிப்பது குறித்து ஜனநாயகக் கட்சியினர் தீவிரமாக விவாதிக்க தொடங்கியுள்ளதாக, POLITICO நிறுவனம் செய்தி.