பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜுலை 12ம் தேதி தமிழ் சினிமா திரையரங்குகளில் வெளியான படம் டீன்ஸ்.
குழந்தைகளை மையமாக கொண்ட இப்படம் சாகச த்ரில்லராக உருவாகியுள்ளது. பயோஸ்கோப் ட்ரீம்ஸ் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாகி 5 நாள் முடிவில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 65 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கதைக்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள நிலையில் வரும் நாட்களில் படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என தெரிகிறது.